மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடவடிக்கை எடுப்போம் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடுவது சரியில்லை: திருமாவளவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    நடவடிக்கை எடுப்போம் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடுவது சரியில்லை: திருமாவளவன்

    மதுரை: ஆளுநர் மாளிகையின் சமீபத்திய அறிக்கை நேரத்தை வீணடிப்பதுதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    ஆளுநர் மீதான புகார்கள் நிர்மலா தேவி கொடுத்ததாக ஊடகங்கள் செய்திகள் முலம் தான் பேசப்பட்டது.
    இந்த குற்றச்சாட்டை தான் உளடகங்கள் சுட்டி காட்டுகின்றன. இதை தான் நக்கீரன் கோபால் கூறியிருந்தார்.

    The recent press release of the Governors Houses is waste of time: Thol Thirumavalavan

    இதை வைத்து ஊடகங்கள் மீது பாய வேண்டிய அவசியமில்லை. அதாவது, குடியரசு தலைவர், ஆளுநரை தாக்குவது, தாக்குவேன் என்று கூறுவது, தாக்குவது போல் செய்கை செய்வது போன்ற தான் குற்றம். இதன்படி 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    ஆனால் நீதிமன்றம் இது குறித்து வழக்கை ஏற்க மறுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்.

    இது தமிழக அரசிற்கும் , காவல் துறைக்கும் தலை குனிவு. ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் அறிக்கை, அவர்களின் நேரத்தை காலத்தை வீண்அடிப்பது. நிர்மலா தேவி வாக்குமுலம் ரகசியமாக இருக்கும் போது ஆளுநர் மாளிகைக்கு எப்படி தெரிய வரும். இது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகும்.

    [இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்]

    தற்போது ஆளுநர் மாளிகை மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுப்போம் என வெளியான அறிக்கை சரியானது அல்ல.
    ஆளுநர் தமிழக அரசை துண்டுவது காவல்துறை துண்டுவது தவறு.

    முதல்வர் மீது சிபிஐ விசாரணை இருப்பதால், தானே முன் வந்து பதவி விலக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
    அவர் மீது ஊழல் முகாந்திரம் இருப்பது என்று ஏற்புடையதாகிறது. இல்லை என்றால் விசாரனை நேர்த்தியாக இருக்க வாய்ப்பு இல்லை.

    அமைச்சர், அதிகாரிகள் மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளன இதை பற்றி அரசு கவனம் கொல்லவில்லை திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் தேதி தள்ளி வைத்ததற்கு உள் நோக்கம் உள்ளது. அரசியல் காரணம் உள்ளது. பா.ஜ.க ஆளும் அரசு ஒரு முடிவு எடுத்த பின்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். மழை புயலால் தேர்தல் தள்ளி வைப்பது என்பது எல்லாம் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல, என திருமாவளன் கூறினார்.

    English summary
    The recent press release of the Governor's House's is waste of time, says VCK chief, Thol. Thirumavalavan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X