• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

8 வழிச்சாலை வந்தா எங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும்.! அதான் எதிர்க்குறாங்க.. முதல்வர் பேட்டி

|

மதுரை: ஏற்கனவே 2010-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக மற்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தான், நீட் தேர்வுக்கான செயல்திட்டம் துவக்கப்பட்டது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது அப்படியே திருப்பி விட்டு பழி போடுகின்றனர் என முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

The road will be reputed by the government, for which some are protesting .. CM Edappadi Palaniswami

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குவதை போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றார்.

மேலும் பேசிய அவர் நடைபெற்று முடிந்த தேர்தல்களில், டிடிவி தினகரனுக்கோ அவரது கட்சிக்கோ மக்கள் செல்வாக்கு துளியும் இல்லை என அவருக்கே தெரிந்து விட்டது. அதனால் தான் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் தினகரன் விலகியுள்ளதாக குறிப்பிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமியத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் பொருட்டே, இரு மாநிலங்களவை உறுப்பிர் பதவிக்கு அதிமுக சார்பாக வேட்பாளர்களை அறிவித்து எம்பி-யாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் எட்டு வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல, மத்திய அரசின் திட்டம் தான். 8 வழிச்சாலை திட்டத்தால் 70 கி.மீ. பயண தூரம் குறையும். இந்த திட்டம் வந்தால் தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும். அதை தடுக்க தான் சிலர் இந்த திட்டத்தை வேண்டுமென்றே எதிர்ப்பதாக கூறினார். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது.

10 மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை மையம் தகவல்

8 வழிச்சாலை சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படும். எனவே சாலை அமைக்க வேண்டியது அரசின் கடமை என்றார். 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு கடந்த ஆட்சியை விட அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார்.

அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப்படுகொலைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும் தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

அதே போல ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து பதிலளித்த பழனிசாமி, 15 ஆண்டு காலம் காவிரி விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்ய கூடாது. அதே போல புதிதாக எந்த அணையும் கட்ட கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chief Minister Palanisamy has said that the program for the NEET was launched only in 2010 when the DMK and the Congress were in power.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more