மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனி தென்றலாக.. வைகை புயலாக.. எடுத்த எடுப்பிலேயே பேச்சுல இப்படி அசத்துறாரே ஒபிஎஸ் மகன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தன்னுடைய செயல்பாடு தேனி தென்றலாகவும் வைகை புயலாகவும் இருக்கும்-எம்பி ரவீந்திரநாத் குமார் பேட்டி

    மதுரை: தன்னுடைய செயல்பாடு தேனி தென்றலாகவும் வைகை புயலாகவும் இருக்கும் என தேனி மக்களை தொகுதி எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி என்றால்அது தேனி தொகுதி எம்பியான ரவிந்திரநாத் குமார் தான். துணை முதல்வர் ஓபிஎஸ் மகனான இவர் தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்கவில்லை. எனினும் இதை பற்றி கவலைப்படாமல் தனது வழக்கமான பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் பணியில் ரவீந்திரநாத்குமார் தற்போது ஈடுபட்டுள்ளார்.

    பஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம் பஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம்

    தொகுதி மக்களுக்கு நன்றி

    தொகுதி மக்களுக்கு நன்றி

    பாலமேடு அருகேயுள்ள மஞ்சமலை அய்யனார் கோவிலில் தரிசனம் ரவீந்திரநாத் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து வலையபட்டி, சத்திரவெல்லாலபட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இந்த கூட்டத்தில். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்ற ரவீந்திரநாத் குமார் எம்பி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    பொதுமக்களிடம் உறுதி

    பொதுமக்களிடம் உறுதி

    அப்போது தொகுதியில் பிரதான பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை போக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார், மக்கள் குறைகளை மக்களில் ஒருவனாக இருந்து சரி செய்வேன் என்றும், மக்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதில் நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்.

    தமிழகத்துக்காக குரல் கொடுப்பேன்

    தமிழகத்துக்காக குரல் கொடுப்பேன்

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தேனி நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வகுத்த வியூகத்தினால் சரித்திர வெற்றி கிடைத்துள்ளது.

    தமிழகத்தின் ஜீவாதாரன பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    நியூட்ரினோ திட்டம்

    நியூட்ரினோ திட்டம்

    நியூட்ரினோ திட்டம் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பின்னர் பதில் தெரிவிப்பேன். மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் துணை முதல்வர் முடிவெடுப்பார்கள். என்னுடைய செயல்பாடு தேனி தென்றலாகவும், வைகை புயலாகவும் இருக்கும்" என தெரிவித்தார்

    English summary
    theni admk mp raveenthiranaath says, thanks to vote for me , i work like Theni breeze, Vaigai storm
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X