மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடப்பாவமே ஜாமீன் கிடைத்தும் நிர்மலாதேவி வெளிவருவதில் சிக்கல்.. செய்வதறியாது திகைக்கும் காவல் துறை!

Google Oneindia Tamil News

மதுரை: அருப்புக்கோட்டையில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தும் அவரால் சிறையிலிருந்து வெளி வர முடியாத சூழல் நிலவுகிறது.

அருப்புக்கோட்டையில் ஒரு கலை கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆசை வார்த்தை பேசி தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 17 -ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சென்னையிலும் விழுந்த பொள்ளாச்சி பயங்கரத்தின் நிழல்.. பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை! சென்னையிலும் விழுந்த பொள்ளாச்சி பயங்கரத்தின் நிழல்.. பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை!

ஜாமீன் கோரி மனு

ஜாமீன் கோரி மனு

இவர் சுமார் 300 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.

சிக்கல்

சிக்கல்

அதன்படி அவருக்கு நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியே வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

முன்வரவில்லை

முன்வரவில்லை

ஒருவருக்கு ஜாமீன் கிடைத்தால் அவரது உறவினர்கள் ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று அழைத்து செல்வது வழக்கம். ஆனால் நிர்மலா தேவி விவகாரத்தில் அவ்வாறு ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று அழைத்து செல்ல யாரும் முன்வரவில்லை.

விரக்தி

விரக்தி

இதுகுறித்து அவரது உறவினர்களிடம் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிர்மலா தேவி அவரது கணவர், மாமனார், மாமியார், அண்ணன் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் யாரும் வரவில்லை. இந்த 300-க்கும் மேற்பட்ட நாட்களில் அவரை சந்திக்க ஒருவரும் வரவில்லை என்பதால் நிர்மலா தேவியில் விரக்தியில் தற்கொலை முயற்சியில் கூட இறங்கியதாக கூறப்படுகிறது.

English summary
Here are some difficulties for Nirmala Devi to come out from Prison even after she gets bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X