மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எத்தனையோ தடவை கூப்பிட்டேன்.. குடும்பம் நடத்த வரலை.. டீச்சர் ரதிதேவி கணவர் பரபர வாக்குமூலம்

ஆசிரியையை கொன்ற கணவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: "எத்தனையோ முறை கூப்பிட்டும் குடும்பம் நடத்த வரவில்லை.. அதான் ஸ்கூலிலேயே வைத்து தீர்த்துக்கட்ட கத்தி, ஸ்குரூடிரைவர் கொண்டு போனேன்" என்று டீச்சர் ரதிதேவியை கொன்ற கணவன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் குருமுனீசுவரன். 36 வயதாகிறது. இவர் ஒரு என்ஜினியர். மனைவி ரதிதேவி மதுரை திருமங்கலத்தில் உள்ள தனியார் ஆண்கள் பள்ளியில் டீச்சராக உள்ளார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை பிரிந்து காரியாபட்டியில் உள்ள தனது அம்மா வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார் ரதிதேவி. போன மாசம்தான் மதுரை திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார்.

 வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா

அலறி ஓடினர்

அலறி ஓடினர்

நேற்று முன்தினம் மதியம் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார் ரதிதேவி. அப்போது, குருமுனீசுவரன், திடீரென ஹெல்மட்டுடன் உள்ளே நுழைந்து, மடார் என டீச்சர் மண்டையில் தாக்கினார். நிலைகுலைந்து விழுந்த டீச்சரை, கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார். இவ்வளவும் மாணவர்கள் கண்முன்னேயே நடந்தது. இதை பார்த்ததுமே குழந்தைகள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். மனைவியை கொன்ற குருமுனீசுவரன் போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரண் அடைந்தார்.

கொடுமை

கொடுமை

இது சம்பந்தமாக டீச்சரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதில், "குருமுனீசுவரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து என் மகளிடம் தகராறு செய்தார்.அவருடன் வாழ பிடிக்காமல் எங்களிடம் வந்துவிடுவார். குருமுனீசுவரன் குடும்பத்தில் உள்ள எல்லாருமே ரதிதேவிக்கு எதிராக செயல்பட்டு அவரை கொடுமைப்படுத்தினர்" என்று தெரிவித்திருந்தார்.

கைது

கைது

இந்த புகாரின்பேரில் குருமுனீசுவரனின் தந்தை சுப்பிரமணி, தாய் பஞ்சவர்ணம், சகோதரிகள் திருச்செல்வி, தனலட்சுமி, மைத்துனர்கள் சிவராஜ், செல்லமணி ஆகிய 6 பேரையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் திருமங்கத்தையே அதிர வைத்த நிலையில், கொலை தொடர்பாக குருமுனீசுவரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அதில், "எங்களுக்கு கல்யாணம் ஆகி 8 வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. என்கூட அவள் சரியாக குடும்பம் நடத்தவில்லை. அடிக்கடி அம்மா வீட்டுக்கு போய்விடுவார். வரவே மாட்டார். எத்தனையோ முறை சொந்தக்காரர்களை வைத்து பேசி பார்த்தாச்சு.. பலமுறை கூப்பிட்டு பார்த்தும் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் ரதி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

கத்தி, ஸ்க்ரூடிரைவர்

கத்தி, ஸ்க்ரூடிரைவர்

திருமங்கலத்தில் ஸ்கூலில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். அதனால் அந்த ஸ்கூலிலேயே வைத்து கொலை செய்ய முடிவு செய்தேன். ஹெல்மட்டில் கத்தி, ஸ்குரூடிரைவர் மறைச்சு வெச்சு எடுத்துட்டு போனேன். என்னை பார்த்ததுமே ரதி அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் நான ஹெல்மெட்டால் ஒரே போடு போட்டு, கத்தியாலும் குத்தி கொன்றுவிட்டேன்" என்றார்.

English summary
Husband has confessed to Police in Thirumangalamin Teacher murder Case Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X