மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆவேசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்

Google Oneindia Tamil News

மதுரை: ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை ஆக்ரோசபட்டு காளிமுத்து என்ற பாகனை மிதித்தது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் முதல்படை ஆகும். இந்த கோயிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. அந்த யானைக்கு பாகன்களாக காளிதாசன், ராஜேஷ் ஆகிய உள்ளனர். இவர்கள் இருவரும் தினமும் யானையை பராமரித்து வந்தனர்.

 Thiruparankundram Subramanya Swamy Temple elephant killed a Pagan today

இந்நிலையில் கோயில் யானையை குளிக்க வைக்க காளிதாஸ் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை தெய்வானைக்கு மதம் பிடித்தது. ஆக்ரோஷமான தெய்வானை பாகன் காளிதாஸை திடீரென தூக்கி வீசி மிதித்தது. இதில் காளிதாஸ் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 Thiruparankundram Subramanya Swamy Temple elephant killed a Pagan today

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணிகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி

மற்றொரு பாகனான ராஜேஸ் யானை தெய்வானை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கட்டி வைத்தார். திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

 Thiruparankundram Subramanya Swamy Temple elephant killed a Pagan today

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாகன் காளிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
today A Pagan killed by madurai Thiruparankundram Subramanya Swamy Temple elephant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X