மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கும் - சீமான் விளாசல்

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்திற்கு ஜேபி நட்டா வந்து பிரசாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கப் போகிறது என விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Recommended Video

    தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழேதான் பாஜக இருக்கும்.. சீமான் விளாசல் - வீடியோ

    மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

    உரிய நேரத்தில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காத நிலையால் தான் விவசாயி தற்கொலை நடந்துள்ளது, மீனவர் படுகொலையில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தரவில்லை.

    TN Assembly Election: Seeman slams BJP leaders Election Campaign

    வலிமை மிக்க இந்திய அரசு ஏன் நமது மீனவர்களை பாதுகாக்கவில்லை? நம் நாட்டின் வெளியுறவுக்கொள்கையே தவறாக உள்ளது. நட்பு நாடு என கூறிகொண்டு நமது மீனவர்களை கொன்றுகுவிக்கும் இலங்கைக்கே ஆயுதம் மற்றும் பயிற்சிகளை வழங்கிவருகிறது மத்திய அரசு.

    தமிழ்நாடு தமிழகமாகத்தான் தான் இருக்கவேண்டும். நீர் இலவசம் உள்ளிட்ட கொள்கையின் அடிப்படையில் வெளிப்படையான நிர்வாகம் என்பதே எங்கள் கொள்கை.

    தமிழகத்தில் பாஜகவினர் தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மத்திய பட்ஜெட் என்பதே அல்வா தான். தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழேதான் பாஜக இருக்கும். சசிகலா உடல்நலத்துடன் மீண்டுவர வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    English summary
    Naam Tamilar Chief Seeman has slammed BJP's National leaders Election Campaign in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X