மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளம்பியது அடுத்த சர்ச்சை... ஓபிஎஸ் முதல்வர்.. எடப்பாடி துணை முதல்வர்.. அதிமுக போஸ்டரால் பரபரப்பு

ராஜன் செல்லப்பா கூட்டத்தில் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வில் ஒபிஎஸ்சை ஓரம்கட்ட எடப்பாடி அணி முயற்சியா?- வீடியோ

    மதுரை: அதிமுகவில் இப்படியொரு அதிரடியா என்று மண்டை காய்ந்து போயுள்ளனர் மக்கள்... ஓபிஎஸ் தான் முதல்வராம், ஈபிஎஸ் துணை முதல்வராம்!

    ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கொளுத்தி போட்டது இன்னும் அரசியலில் புகைந்து வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யாரை ராஜன் செல்லப்பா சொல்ல வருகிறார் என்பது குழப்பமாக இருந்தது.

    எனினும் அது துணை முதல்வர் மகனுக்கு சீட் வாங்க முயற்சித்து வருவதால், அவரை சொல்வதாகவே கருதப்பட்டது. ராஜன் செல்லப்பாவின் பேட்டி குறித்து நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என்ற உத்தரவை தலைமை பிறப்பித்தது.

    ராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்! ராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்!

    ஆலோசனை

    ஆலோசனை

    ஆனாலும், நேற்று திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எப்படி சமாளிப்பது மற்றும் அடுத்த கட்ட அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பேனர்

    பேனர்

    இந்த கூட்டத்தில் குடும்ப உறுப்பினருக்கு பதவி வழங்க வேண்டும் கோரிக்கையை ராஜன் செல்லப்பா சூசகமாக முன் வைத்தார். ஆனால் ராஜன் செல்லப்பா பேசியதைவிட அதிக அளவு பேசப்பட்டது கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்தான்.

    போட்டோக்கள்

    போட்டோக்கள்

    அதில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்டிருப்பதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே செய்தியாளர்கள் இந்த பேனரை போட்டோவும் எடுத்து கொண்டனர்

    விமர்சனம்

    விமர்சனம்

    ஆனால் சிறிது நேரத்தில், ஒரு பேப்பரில் அந்த பேனர் ஒட்டி அதிமுகவினர் மறைத்தனர். ஆனால் அதற்குள் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி விட்டதுடன் கடுமையான விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.

     அடுத்த சர்ச்சை

    அடுத்த சர்ச்சை

    இப்படித்தான், தேனி கோயிலில் எம்பி என்று போட்டு ஓபி ரவீந்திரநாத் குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு எம்பி என்ற சர்ச்சை போய் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என்று போஸ்டர் அடிக்கப்பட்டது. இப்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    English summary
    "Chief Minister O Panneerselvam and Dy Chief Minister Edapadi palanisamy Poster" in Thiruparankundram Rajan Chellappas meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X