மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விதிகளைப் பாலோ பண்ணுங்க.. ஒரு பிரச்சினையும் வராது.. கமலுக்கு எடப்பாடியார் அறிவுரை

Google Oneindia Tamil News

Recommended Video

    கமலுக்கு எடப்பாடியார் அறிவுரை-வீடியோ

    மதுரை: தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் கமலுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்கினார்

    4 தொகுதிகள் இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கமல் பேச்சு சர்ச்சை உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கமல் சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு பேச வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், இது குறித்து கருத்துக் கூற இயலாது என்றார்.

    கமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா? காயத்ரி ரகுராம் கமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா? காயத்ரி ரகுராம்

    வறட்சி நடவடிக்கை

    வறட்சி நடவடிக்கை

    குடிநீர் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் பருவ மழை சரியாக பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதிகளில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குடிநீர் வழங்க உத்தரவு

    குடிநீர் வழங்க உத்தரவு

    குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் ஆட்சியர்கள் தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க உத்தரவிட்டுள்ளது, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

     அரசியல் தலையீடு இல்லை

    அரசியல் தலையீடு இல்லை

    அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது என்று முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.

     தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் பிரச்சாரத்தின்போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசும் அரசியல் தலைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தேர்தல் நேரத்தில் நடைபெறும் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசினால் தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வருவதால் அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சினையும் ஏற்படாது" இவ்வாறு கூறினார்.

    English summary
    TN CM Edappadi Palanisamy advice to makkal needhi maiam leader kamal haasan, if follow election rules, no problem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X