மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்நாள் முழுவதும் வைரமுத்து தூங்கவே முடியாது.. அடடா சாபம் விட்டுட்டாரே எச். ராஜா!

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாழ்நாள் முழுவதும் வைரமுத்து தூங்கவே முடியாது-எச். ராஜா!

    மதுரை: என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்கவே முடியாது முடியாது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். அத்துடன் சின்மயி விவகாரம் சம்பந்தமாக தமிழக அரசு அவர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வைரமுத்துவை சின்மயி குற்றஞ்சாட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே, ஆண்டாள் விவகாரமும் இதன் பின்னணியில் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்து கொண்டே வந்தது. ஆனால் 2 தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, தன் மீது அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும், ஆண்டாள் விவகாரத்திற்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

    வாய் திறக்காத எச்.ராஜா

    வாய் திறக்காத எச்.ராஜா

    ஆனாலும் பாஜக தரப்பில் தமிழிசை உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவாக கருத்து கூறினார்களே தவிர ஆண்டாள் விவகாரம் பற்றி பேசவில்லை. இதில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கருத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் இருந்துதான். இதுநாள் வரை ஆண்டாள் விவகாரம், சின்மயி புகார் என எதற்கும் கருத்து சொல்லாத எச்.ராஜா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையடுத்து, தற்போது இதுபற்றியெல்லாம் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    புனிதத்தை கெடுக்கிறார்கள்

    புனிதத்தை கெடுக்கிறார்கள்

    மதுரையில் எச்.ராஜாவிடம் சபரிமலை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எச்.ராஜா, "கேரள இடதுசாரி அரசும், இந்துத்துவ விரோத சக்திகளும் ஒன்றாக இணைந்து சபரிமலையின் புனிதத்தை கெடுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதே கேரளாவில், 6 மாதத்திற்கு முன்பு ஒரு சர்ச்-க்கு இரு கோஷ்டிகள் உரிமை கொண்டாடினார்கள். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் போனது.

    பினராயி விஜயன்

    பினராயி விஜயன்

    நீதிமன்றமும் ஒரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் முதலமைச்சரோ, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனைதான் ஏற்படும், அதனால் கால அவகாசம் கோரினார். அதே நடைமுறையை இந்த சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் ஏன் பின்பற்றவில்லை?

    ஆபாச போட்டோக்கள்

    ஆபாச போட்டோக்கள்

    ஆபாசமாக போட்டோக்களை பதிவிட்ட ரெஹனா பாத்திமா என்பவர், கமாண்டா டிரஸ் அணிந்து சபரிமலை வரை போயுள்ளார். இந்த கேரள முதலமைச்சரின் கீழ்த்தரமான செயலே ஆகும். இதையெல்லாம் கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் அய்யப்பன் நாமசங்கீர்த்த யாத்திரை நடைபெற உள்ளது" என்றார்.

    நிம்மதியா தூங்க முடியாது

    நிம்மதியா தூங்க முடியாது

    இதையடுத்து சின்மயி விவகாரம் குறித்த கேள்விக்கு, "வைரமுத்து மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது" என்று பதிலளித்தார் எச்.ராஜா.

    English summary
    Govt need to take serious action against Vairamuthu: BJP H.Raja
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X