மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரமான சிகிச்சை மக்களுக்குக் கிடைக்கப் போகிறது.. மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் அமையவிருக்கும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தென் தமிழக மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மதுரையில் நாளை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 tn will get high quality medical treatment once Madurai AIIMS come into effect, says minister

அடிக்கல் நாட்டு விழா மைதானத்தைப் பார்வையிட்ட தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் உடன் இருந்தனர்.செய்தியாளர்களை சந்தித்த விஜய பாஸ்கர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாகப் பேசினார். .

எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் வலியுறுத்தியதன் பேரில் பிரதமர் மோடி டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து ரூபாய் 1264 கோடி திட்டமதிப்பில் வரும் 27ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

மத்திய அமைச்சர்கள் ஜேபி நாட்டா , பொன் ராதா கிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . துணை முதல்வர் ஓபன்னீர் செல்வம் மற்றும் கூட்டுறவு , வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் தமிழகத்திற்கு குறிப்பாக தென் தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் பலன் கிடைக்கும். எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் 100 மருத்துவர், 60 நர்ஸ்கள் மற்றும் 750 படுக்கை வசதி அமைய உள்ளது. மேலும் மருத்துவ மேற்படிப்பிற்கு 350 இடங்கள் கிடைக்கும். இது உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையம் உள்ள மருத்துவ வளாகமாக அமையும். அம்மாவின் கவைு திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.

இதுதவிர மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி செலவில் 350 படுக்கை வசதிகளுடன் சிறந்த உயர் சிகிச்சை பிரிவு அமையவுள்ளது. இதே போல் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் ரூபாய் 150 கோடி செலவில் 290 படுக்கை வசதிகளுடன் சிறப்பு உயர் சிகிச்சை மையமும். தஞ்சை மருத்துவ கல்லூரியில் ரூபாய் 150 கோடி செலவில் 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு உயர் கிகிச்சை பல்நோக்கு மருத்துவமனையும் அமைய உள்ளது. மொத்தம் 450 கோடி செலவில் 940 படுகை வசதி கொண்ட சிறப்பு பல் நோக்கு மருத்துவ மனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்,

இங்கு எம்.ஆர்.ஐ , சி.ஆர்.ஐ மற்றும் டயாலிஸிஸ், டிரான்ஸ் பிளான்ட் எனும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்குகளும் மக்களுக்கு அர்பணிக்கப்பட உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடைவதால் அனைவரும் உயர் சிகிச்சை பெற முடியும். இதன் மூலம் தமிழக மருத்துவ துறை மாற்றமும் , முன்னேற்றமும் அடையும். எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டிடப்பணிகள் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகளில் முடிவடையும் என விஜயபாஸ்கர் கூறினார்

English summary
Prime Minister Narendra Modi is coming to Madurai on May 27. He will lay the foundation stone for the central government's AIIMS hospital in Madurai. There are many hundreds of people working through this hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X