மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேரோடும் மதுரையிலே.. வைகையிலே பெரு வெள்ளம்.. செம செம.. மக்களே எச்சரிக்கை.. கவனமா இருங்க!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றின் மீதுள்ள தரைப்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Recommended Video

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கவனமா இருங்க மக்களே!! - வீடியோ

    வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு மலை பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு நீா்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. அண்மையில் 12 ஆயிரம் கனஅடி நீர் வரை வந்தது. இதேபோல் முல்லை பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு திறப்பு அதிகமாக உள்ளது

    இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணைய்ல தண்ணீர் 60 அடி தாண்டியை தாண்டி உள்ளது.

    தென்மாவட்டங்கள்

    தென்மாவட்டங்கள்

    இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக, வைகை அணையில் இருந்து, வினாடிக்கு, 3,000 கன அடி வீதம், நேற்று காலை முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

    தண்ணீர் எவ்வளவு

    தண்ணீர் எவ்வளவு

    முல்லை பெரியாறு அணை, வருஷநாடு மூலவைகை, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகளின் நீர் வரத்தால், நீர்வரத்து வினாடிக்கு, 1,515 கன அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு, கால்வாய் வழியாக, ஆக., 30 முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, முறைப்பாசன அடிப்படையில் வினாடிக்கு, 1,200 கன அடியும், குடிநீருக்காக, வினாடிக்கு, 69 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

    மக்களுக்கு வார்னிங்

    மக்களுக்கு வார்னிங்

    இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு, ஆற்றின் வழியாக, 21 நாட்களில், 1,792 மில்லியன் கன அடி நீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டது. .முதல் கட்டமாக, ராமநாதபுரத்திற்கு நேற்று முதல், டிச., 6 வரை, 1,093 மில்லியன் கன அடியும், டிச., 7 முதல், 12 வரை சிவகங்கைக்கு, 449 மில்லியன் கன அடியும், டிச., 13 முதல் 17 வரை, மதுரைக்கு, 250 மில்லியன் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

    தரைப்பாலங்கள்

    தரைப்பாலங்கள்

    நீர் வரத்து அதிகரிப்பால் மதுரை நகரில் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீா் செல்கிறது. வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கல்பாலம், ஓபுளாபடித்துறை தரைப்பாலம், குருவிக்காரன்
    சாலை தற்காலிக தரைப்பாலம் ஆகிய 3 பாலங்களும் மூழ்கின. எனவே, கடந்த சனிக்கிழமை முதல் 3 பாலங்களும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

    பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

    தரைப்பாலங்களில் பொதுமக்கள் செல்லாதவாறு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், வைகை ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என்றும், மீறி ஆற்றில் குளிப்பவா்கள் மற்றும் துணிகளை துவைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எச்சரித்துள்ளன.

    English summary
    The flood warning was issued to people living near the banks of the Vaigai river in five southern districts of Theni, Madurai, Dindigul, Sivaganga and Ramanathapuram after the water level in Vaigai dam touched the 61ft mark.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X