மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்

Google Oneindia Tamil News

மதுரை: நம்ம வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது சேவையை ஆரம்பித்து இன்றுடன் 42 வருஷம் ஆச்சு. இதனால் நம்ம வைகை ரயிலுக்கு கேக்வெட்டி, பூமால போட்டு, உற்சாகமாக பிறந்த நாள் கொண்டாடி நம்ம ரயில்வே அதிகாரிங்க அசத்திபுட்டாங்கல்ல..

கேட்கவே ஆச்சர்யமாதாங்க இன்னமும் இருக்கு.. இப்பத்தான் அதிவேக ஆம்னி பஸ்கள் எல்லாம் 8மணி நேரத்தில் சென்னைக்கு போய் சேருது. அதுவும் செங்கல்பட்டு டூ பெருங்களத்தூர் டிராபிக் ஆச்சுன்னா கஷ்டம் தான். ஆனால் 42 வருஷத்துக்கு முன்னாடியே நம்ம வைகை எக்ஸிபிரஸ் 8மணி நேரத்துக்கு முன்னாடிய மதுரையில இருந்து சென்னைக்கு போயிருக்கு.. இந்த ரயில் தான் நம்ம ஊர் மக்களுக்கு அந்த காலத்துல மலிவு விலை விமானம்,

ஏரோப்பிளானில் சொய்யிங்ணு போக வசதி இல்லாத ஏழைகளின் (ரதம்) விமானம் தாங்க நம்மஊர் வைகை எக்ஸ்பிரஸ். 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மதுரை சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ஆரம்பிக்கப்பட்டது.

இம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல் இம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்

காலையில் போனால் மாலையில்

காலையில் போனால் மாலையில்

இதுதாங்க நம்ம மதுரை மாவட்டத்தோட முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.. இந்த ரயில் இப்ப நிலவரத்துல காலையில் 6.40க்கு மதுரையில எடுத்தா சுமார் 2 .40க்கு எல்லாம் சென்னைக்கு வந்திடும். இதேபோல் திருச்சியில காலையில் 6மணிக்க புறப்பட்டு வர்ற பல்லவன் மதியம் வந்து சேர்ந்த உடன், பிற்பகல் 1.43க்கு எடுத்தாங்க அப்படீன்னா இரவு 9 .25க்கு எல்லாம் மதுரைக்கு போயிடும்.

தாகம் தீர்க்கும் வைகை

தாகம் தீர்க்கும் வைகை

மதுரை மக்களின் தாகம் தீர்க்கும் வைகை நதியின் பெயரை வைத்ததாலே என்னவே இன்று வரை மதுரை மக்களின் பயண தாகத்தை இடைவிடாமல் தீர்த்து வந்துகிட்டு இருக்கு.. சென்னையில் இருக்குற தென்மாவட்ட மக்கள் விரும்பிச்செல்லும் ரயில் என்றால் இன்றும் வைகை எக்ஸ்பிரஸ் தாங்க.

எங்கயும் நிற்காது

எங்கயும் நிற்காது

மற்ற எல்லா ரயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வைகை எக்ஸ்பிரஸ்க்கு இருக்குங்க.. என்னான்னா இந்த ரயில் அந்த காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எந்த ரயில் வந்தாலும் கேட்போட்டு நிப்பாட்ட மாட்டாங்க.. வைகை வருதுன்னா மற்ற ரயில் எல்லாம் ஒதுங்கி வழிவிட்டுடும். அதேபோல் ரொம்ப நேரம் எந்த ஸ்டேசன்லயும் நிற்காது. சும்மா பறந்துகிட்டு ஊர் வந்து சேர்ந்திடும்.

வைகை எக்ஸ்பிரஸ் பிறந்த நாள்

சரிவிஷயத்துக்கு வந்திடுவோம். இத்தனை சிறப்பு மிக்க வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் மதுரை மக்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். காலையில் ரயில் புறப்படும் முன்பு பூமாலை போட்டு, ஆராத்தி எடுத்து, கேக்வெட்டி, மக்களுக்கு கொடுத்து ரயில்வே அதிகாரிகள் பிறந்த நாளை அசத்தலாக கொண்டாடினார்கள். இதை பார்க்கும் போது ரொம்பவே நெகிழ்ச்சியாவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏன்னா நம்மூரு ரயிலு வண்டிங்க..

English summary
Madurai: Vaigai Express, a flagship train of Madurai city, completed 42 years of service of shuttling between Chennai and Madurai, today. The milestone was celebrated by cutting a cake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X