மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு கருப்பு கொடி காட்றது பெருமையா.. இல்லை கடமை.. திருப்பூரிலும் களம் இறங்கும் வைகோ!

திருப்பூர் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தினை வைகோ அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு கருப்பு கொடி காட்றது பெருமை இல்லை கடமை- வைகோ- வீடியோ

    மதுரை: பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்றதெல்லாம் என்ன பெருமையா? கடமை... என்கிற ரேஞ்சில் இறங்கி விட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

    பிரதமர் என்றதும் தமிழகத்தில் ஒரு அரசியல் உருவம் நம் கண் முன் வந்து நிற்கிறார் என்றால் அது வைகோதான்.

    அந்த அளவுக்கு கடந்த சில மாதங்களாகவே எதிர்த்து வருகிறார். மோடியின் டிரஸ்-ல் ஆரம்பித்து ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளே இறங்கி தூர் வாரிப்போட்டு விமர்சித்தும் வருகிறார்.

    நாசமா போயிடும்

    நாசமா போயிடும்

    இதுவரை மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் வைகோவின் கருப்பு கொடி போராட்டம் ரொம்ப ஃபேமஸாகவும், வைரலாகவும் போனது. கடந்த முறை மதுரைக்கு பிரதமர் வருவதற்கு முன்னேயே, "தப்பித் தவறி மோடி ஆட்சிக்கு மட்டும் வந்துட்டா, இந்த நாடு நாசமா போயிடும் என்கிற கவலை எனக்கு ரொம்பவே இருக்கிறது.

    சிஐடிகளாலும் முடியாது

    சிஐடிகளாலும் முடியாது

    மதிமுக சார்பில் எனது தலைமையில் கருப்புக்கொடியை அவருக்கு காட்டுவேன். கருப்பு பலூனையும் பறக்கவிடுவோம். சிஐடி-களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து பலூனை பறக்க விட போகிறோம்" என்று தெறிக்கவிட்டு பேட்டி கொடுத்தார் வைகோ.

    மதுரையில் கருப்பு பலூன்

    மதுரையில் கருப்பு பலூன்

    அதன்படியே செய்தும் காட்டினார். மதுரைக்கு மோடி வந்தபோது வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக் கொடி, பலூன் காட்டி மிரள வைத்தனர். இந்நிலையில், நாளை தமிழகம் வரப்போகும் பிரதமருக்கு மீண்டும் கருப்பு கொடியை காட்டுவேன் என்று ஆணித்தரமாக சொல்கிறார் வைகோ.

    கருப்பு கொடி

    கருப்பு கொடி

    மதுரை அழகர்கோவிலில் மதிமுக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வைகோ கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கருப்பு கொடி போராட்டம் பற்றி சொன்னதாவது:

    இது என் கடமை

    இது என் கடமை

    "தமிழகத்திற்கு கணிக்க முடியாத பல துரோகங்களை செய்திருக்கிறார். அதை கண்டித்து கருப்புக் கொடி என் தலைமையில் காட்டப்படும். திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கருப்புக்கொடியை காட்ட உள்ளோம். அரசியல் ரீதியாக மோடியை எதிர்ப்பதும், பிரதமர் வரும்போது கருப்பு கொடி காட்டுவதும் தமிழகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை" என்றார்.

    English summary
    MDMK President Vaiko says, It is my duty to show the Black flag to Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X