• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

''அண்ணா யாரு தளபதி''.. அடங்காத விஜய் ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்கள்.. செம வைரல்!

Google Oneindia Tamil News

மதுரை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணாவையும், தமிழகத்தையும் பிரிக்க முடியாது. தமிழகத்தில் தமிழ் மொழி தழைத்தோங்க ஈடில்லா திட்டங்களை நிறைவேற்றினார் அண்ணா.

கலங்கடிக்கும் நிலவரம்.. 6 லட்சம் கடனுக்கு 3 கோடி கந்து வட்டி! கோவில்பட்டி பெண்ணின் பரபரப்பு வீடியோகலங்கடிக்கும் நிலவரம்.. 6 லட்சம் கடனுக்கு 3 கோடி கந்து வட்டி! கோவில்பட்டி பெண்ணின் பரபரப்பு வீடியோ

1967-ம் ஆண்டு தமிழகத்துக்கு இருந்த 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை மாற்றி 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது, சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை உருவாக்கியது, இந்தித் திணிப்பை ஒழித்து கட்டும் விதமாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை சட்டத்தை உருவாக்கியது என்று அண்ணாவின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முதல்வர் ஸ்டாலின் மரியாதை

இன்று அண்ணாவின் பிறந்தநாள் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க திராவிட கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் அண்ணாவின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி மரியாதை

எடப்பாடி பழனிசாமி மரியாதை

இதேபோல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் அண்ணா சிலை மற்றும் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க சார்பில் அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நடிகர் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் ரசிகர்கள்

இப்படி அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்க மதுரையில் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர். அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவர்கள் ஒட்டிய போஸ்டர்தான் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது விஜய் ரசிகர்கள் மதுரை பகுதியில் நடிகர் விஜய்யை அண்ணா போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அண்ணா யாரு தளபதி

அண்ணா யாரு தளபதி

நடிகர் விஜய் அண்ணா உருவம் போல் இருக்கும் அந்த போஸ்டரில் ''நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாயிருந்தார்... எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா, தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு தளபதி'' என்று வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் குறித்து நெட்டிசன்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க.வினர் எதிர்ப்பு

தி.மு.க.வினர் எதிர்ப்பு

''தமிழ்நாட்டை உருவாக்கிய பெருமை மிகு அண்ணாவை இப்படியா சித்தரிப்பது'' என்று தி.மு.க.வினர் சிலர் விஜய் ரசிகர்களுடன் மல்லுக்கட்ட, விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தலைவா படம் தொடங்கி நடிகர் விஜய் நடித்த மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்கள் அரசியல் ரீதியாக சர்ச்சையாகின. இந்த இரண்டு படங்களிலும் மத்திய அரசை தாக்குவதுபோல் காட்சிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 அரசியலுக்கு வருவாரா?

அரசியலுக்கு வருவாரா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்று கேள்விகள் எழுந்தன. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அரசியல் தொடர்பாக அவர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். ஆனால் விஜய்யின் படங்களில் அரசியல் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay fans have put up posters in the Madurai area depicting actor Vijay as tamilnadu Former chife minister arignar Anna.It is noteworthy that Vijay's films feature political verses and scenes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X