மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புமணிக்கு சவால் விடுவது இருக்கட்டும்.. உதயநிதி என்னுடன் வாதிட தயாரா.. விஜய பிரபாகரன் அழைப்பு

வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து விஜயபாகரன் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார்.

Google Oneindia Tamil News

டி.கல்லுபட்டி: இப்ப எல்லாம் பிரச்சாரத்தில் ஆளாளுக்கு சவால் விட்டு வருகிறார்கள். அந்த லிஸ்ட்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் விஜயகாந்த் மகன்!

விருதுநகர் தொகுதி டி.கல்லுப்பட்டியில் விஜயபிரபாகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, "விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தே.கல்லுப்பட்டியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது, "இது எங்களுடைய பூர்வீகமான தொகுதி. அதனால்தான் அப்பா இந்த தொகுதியை கேட்டு வாங்கினார். போன முறை கேப்டன் பிரசாரம் செய்த அதே வாகனம்தான் இது. அதில்தான் நானும் இப்போது பிரசாரம் செய்கிறேன்.

வான் மேகம் பூப் பூவாய் தூவும்.. சில்லிட வைக்கும் அமெரிக்காவின் செர்ரி பூ திருவிழா! வான் மேகம் பூப் பூவாய் தூவும்.. சில்லிட வைக்கும் அமெரிக்காவின் செர்ரி பூ திருவிழா!

நல்லாயிடுவார்

நல்லாயிடுவார்

கேப்டன் சீக்கிரமாக குணமாவது உங்கள் கையில்தான் இருக்கு. நீங்க மட்டும் தேமுதிகவை ஜெயிக்க வெச்சு, மக்களவைக்கு அனுப்பினால், அந்த சந்தோஷத்திலேயே அவர் நல்லாயிடுவார்.

பிரபாகரன்

பிரபாகரன்

எந்த தலைவரும் தங்களுடைய பிள்ளைக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை. ஆனால், எனக்கு வைத்திருக்கிறார். அந்தப் பெயரை நிலைநாட்டுவேன்.

சவால்

சவால்

8 வழிச்சாலை குறித்து விவாதம் தயாரா என்று அன்புமணியிடம் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். இப்போது நான் ஒரு சவால் விடுகிறன். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து என்கூட விவாதம் நடத்த அவர் தயாரா?" என்று சவால் விடுத்தார் விஜயபிரபாகரன்.

வேட்பாளர்

வேட்பாளர்

ஒரு பின் குறிப்பு.. இவ்வளவும் வேட்பாளர் பக்கத்தில் இல்லாமலேயே பேசி வாக்கு கேட்டார் விஜயபிரபாகரன். அந்த தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி. ஆனால் பிரச்சாரத்தில் அவர் இல்லை என்றாலும், அவரை ஆதரித்து ஓட்டு கேட்டார் விஜயபிரபாகரன்!

English summary
Vijaya Prabhakaran election campaign in T Kallupatti and challenged DMK Udhayanidhi Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X