மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீனாட்சி அம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு பதினெட்டு படி அரிசி மாவில் செய்த கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று 18 படியில் ராட்சத கொழுக்கட்டை படைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி தினமாக காலையில் உச்சி கால பூஜையின்போது 11 மணிக்கு அந்த பெரிய கொழுக்கட்டையை 4 பேர் மூலம் மூங்கில் கம்பில் சுமந்து வந்து சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெறும் என்று மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த கொழுக்கட்டை படையல் வழிபாட்டின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

Recommended Video

    விநாய சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்..ஊர்வலம் வேண்டாம் - தமிழக அரசு

    மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு அடுத்து அனைவரின் கவனத்தை ஈர்ப்பது தெற்கு நோக்கி காட்சி அளிக்கும் முக்குறுணி விநாயகர். 8 அடி உயரமுள்ள அந்த விநாயகர் சிலையானது அப்படியே முழு உருவமாக மண்ணில் இருந்து கிடைத்ததாகும்.

    Vinayagar chaturthi mukkurini vinayagar 18 padi kolukattai Padayal

    திருமலைநாயக்கர் மன்னர், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தற்போதுள்ள தெப்பக்குளம் பகுதியில் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் 8 அடி உயரத்தில் 4 கரங்களுடன் அமர்ந்த நிலையில் விநாயகர் உருவ சிலை மண்ணில் புதைந்து கிடந்தது. அந்த சிலையை அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய செல்பவர்கள் இந்த பிள்ளையாரை தரிசனம் செய்யாமல் போக முடியாது. இந்த பிரம்மாண்ட விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு வெள்ளியால் ஆன கவசம் அணிவிக்கப்படும். பின்னர் உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று 18 படியில் ராட்சத கொழுக்கட்டை படைக்கப்படும். குறுணி என்றால் 6 படியாகும். முக்குறுணி என்றால் 18 படி என்று பொருள்படும். இதற்காக வியாழக்கிழமை மாலை நல்ல நேரத்தில் கொழுக்கட்டை செய்வதற்கான பூஜை தொடங்கியது.

    மோடி டூ ஸ்டாலின் வரை.. மோடி டூ ஸ்டாலின் வரை.. "ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டு".. பிரஷாந்த் கிஷோரின் அறியப்படாத ஹிஸ்டரி

    அரிசியை இடித்து மாவாக்கி அதை பக்குவப்படுத்தி கொழுக்கட்டை வேக வைப்பார்கள். ஆகஸ்ட் 22ஆம் தேதி நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி தினமாக காலையில் உச்சி கால பூஜையின்போது 11 மணிக்கு அந்த பெரிய கொழுக்கட்டையை 4 பேர் மூலம் மூங்கில் கம்பில் சுமந்து வந்து சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெறும் என்று மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த கொழுக்கட்டை படையல் வழிபாட்டின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியை இணைய தளத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English summary
    Vinayaka temples marked Vinayaka Chaturthi celebrations on August 22nd 2020 At Mukkuruni Vinayakar sannithi in Meenakshi Sundareswarar Temple, a huge kolukattaimade of 18 padi of rice flour was offered to the deity during uchchi kaala pujai time at 11 AM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X