மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் படுதோல்வியால் அதிமுகவில் புகைச்சல்.. செல்லூர் ராஜுவை தூக்குமாறு வாட்ஸ் அப் பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    கம்யூனிஸ்ட் கட்சியை வெல்ல வைத்த மதுரை மக்கள்..காரணம் இது தான்!

    மதுரை: மதுரையில் நடந்த லோக்சபா தேர்தலிலும், திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்ததால், மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜுவை மாற்ற வேண்டும் என அதிமுகவில் ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களால் மதுரையில் அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    மதுரை லோக்சபா தொகுதியில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அங்கு தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜுதான் நியமிக்கப்பட்டார்.

    ஆனால் பிரச்சாரத்தின் போதே தேர்தலில் சரியாக பணியாற்றுவதில்லை என செல்லூர் ராஜு மீது ராஜன் செல்லப்பா தரப்பினர் முதல்வர் பழனிச்சாமியிடம் புகார் அளித்தனராம்.

    அந்த ஒத்த டிவீட்டால் பெரும் சர்ச்சை.. பாஜகவில் சேரப் போகிறாரா திவ்யா.. பரபரக்கும் கர்நாடகாஅந்த ஒத்த டிவீட்டால் பெரும் சர்ச்சை.. பாஜகவில் சேரப் போகிறாரா திவ்யா.. பரபரக்கும் கர்நாடகா

    ராஜன் செல்லப்பா அதிருச்சி

    ராஜன் செல்லப்பா அதிருச்சி

    அப்போது அவர்களை சமாதானம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இந்நிலையில் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சுமார் ஒரு லட்சத்து 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜ் சத்தியனை தோற்கடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜன் செல்லப்பா வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்துள்ளாராம்.

    ராஜன் செல்லப்பா அதிருப்தி

    ராஜன் செல்லப்பா அதிருப்தி

    ஆனால் கொடுக்கப்பட்ட பணம் சரியான முறையில் வாக்காளர்களிடம் போய் சேராமல் போய்விட்டதாம் இதனால் அமைச்சர் செல்லூர் ராஜு முறையாக தேர்தல் பணியாற்றவில்லை என அதிருப்தியில் உள்ளாராம். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடியிடம் புகாரும் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்லூர் ராஜுவை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளாராம் ராஜன் செல்லப்பா. இவர்களை சமாதானம் செய்யும் வேலைகளில் அதிமுக தலைமை ஈடுட்டு வருவதாக தெரிகிறது.

    அதிமுக தோல்வி

    அதிமுக தோல்வி

    இந்நிலையில் நேற்று மதுரை அதிமுக வாட்ஸ் அப் குரூப்பில் உண்மை கழக தொண்டர்களே சிந்திப்பீர் என்ற தலைப்பில் செல்லூர் ராஜுவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.அதில் "எம்ஜிஆர் ஜெயலிதா காலத்தில் மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இப்போது மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம். திருப்பரங்குன்றத்திலும் தோற்றுள்ளோம்.

    ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

    ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

    இந்த தோல்விக்கு யார் பொறுப்பு, தொண்டர்களா அல்லது மதுரை மாநகர் மாவட்ட தலைமையா என்பது தொண்டர்களின் குமுறலாக உள்ளது. எளிதில் வெற்றிபெற வைக்க வேண்டிய மாவட்ட செயலாளரின் (செல்லூர் ராஜு) அலட்சிய பணிகளால் தோற்றுவிட்டோம். தோல்விக்கு பொறுப்பேற்ற வஅவரது தாமாக பதவி விலக வேண்டும். புதிய மாவட்ட செயலாளரை நியமித்து அதிமுகவின் கோட்டையாக மதுரையை மீண்டும் மாற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

    English summary
    aiadmk big loss in madurai : viral whatsapp post against minister sellur raju in madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X