மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீர் பஞ்சம்.. செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம் உள்ளதா?.. மதுரை ஹைகோர்ட் கேள்வி

Google Oneindia Tamil News

மதுரை: செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாதது, நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடியை கடந்து சென்றது, கால்நடைகளும் மனிதர்களும் தண்ணீர் இன்றி தவிப்பதாகவும் கூறி, பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Water scarcity: is any possibility for artificial rain? High Court Madurai Branch Question

தமிழகத்தில் இதுவரை ரூ.54.43 கோடி ரொக்கம்... கிலோ கணக்கில் தங்கம் & வெள்ளி பறிமுதல் தமிழகத்தில் இதுவரை ரூ.54.43 கோடி ரொக்கம்... கிலோ கணக்கில் தங்கம் & வெள்ளி பறிமுதல்

மேலும், 2020ஆம் ஆண்டில் தமிழகம் தண்ணீர் இன்றி சுடுகாடாகும் என்ற "நிட்டி" ( NITI ) அமைப்பின் ஆராய்ச்சி முடிவையும் குறிப்பிட்டு போர்க்கால அடிப்படையில் அணைகளைத் தூர்வாரி தண்ணீர் சேமிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மரங்களை வெட்டுவதாலும், நீர்நிலை ஆக்கிரமிப்பாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை மழையை நாடுவதை தவிர வேறு வழி இல்லை என்று கூறிய நீதிபதிகள், அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

English summary
Is there a plan to make artificial rain fall?: Madurai High Court Question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X