மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தானுக்கு தக்க அடி கொடுக்கப்படும்.. ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை வந்த ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி திடீர் ரத்து..வீடியோ

    மதுரை: காஷ்மீ்ரில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாதுகாப்பு படை வீரர்களின் தியாகம் வீண் போகாது, உலகில் உள்ள நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தனிமைபடுத்தபட்டுள்ளது.

    we will give a befitting reply to pakistan warns union minister

    ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணமான குற்றங்களை செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். தாக்குதல் குறித்த பாகிஸ்தானின் பதில் என்பது வழக்கமான ஒன்று என்று ரவிசங்கர் பிரசாத் எச்சரித்தார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக பல்வேறு திட்டங்கள் செய்துள்ளது. குறிப்பாக எய்ம்ஸ், ஸ்மார்ட் சிட்டி, போர்டு, பிபிஓ வ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மோடி அரசு தூய்மை இந்தியா திட்டத்தில் 10கோடி கழிப்பிடங்களை கட்டப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 52லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. முத்ரா கடன் திட்டத்தில் 17கோடி இந்தியர்களுக்கு 7.5லட்சம் அதில் 2லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசு தமிழகத்தை முழுமையாக உதவிசெய்துவருகிறது,

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் - காங் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும். தமிழகத்தில் விரைவில் கூட்டணியை முடிவு செய்வோம். இந்த கூட்டணி வலுவாக அமையும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    பாஜக தனியாக 300சீட்டுகளையும், கூட்டணியுடன் சேர்ந்து 350சீட்டுகளையும் கைப்பற்றும். மோடி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார். காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியின் தலைவர் யார் என தெரியவில்லை. வளர்ச்சி திட்டம் குறித்த எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

    மோடியை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், மோடி நாட்டின் வளர்ச்சியை விரும்புகிறார் என்றார்.

    English summary
    Union minister Ravi Shankar Prasad has warned that India will give a befitting reply to Pakistan for its attack on Indian soil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X