மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    Sellur Raju praises Rajini | ரஜினிகாந்தை பாராட்டினார் அமைச்சர் செல்லூர் ராஜு

    மதுரை: பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை ரஜினி அவரது பாணியில் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்று சொல்லியிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றுள்ளார்.

    மதுரை மாநகராட்சி 91வது வார்டு ராமையா தெருவில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.

    அத்துடன் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய அங்கன்வாடி மையத்தினையும் அமைச்சர் செல்லூர் ராஜூ வைத்தார் திறந்து வைத்தார்,

    நாட்டின் ஒற்றுமை

    நாட்டின் ஒற்றுமை

    பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமையை கருத்தில் கொண்டு தான் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்று ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்,

    ரஜினி அவர் ஸ்டைலில்

    ரஜினி அவர் ஸ்டைலில்

    ரஜினிகாந்த் கூறிய கருத்தை 1962 ல் வீடு இருந்தால் தான் கூரை இருக்கும் என அண்ணா கூறியுள்ளார். 1962ல் சீனா படையெடுத்தபோது திராவிட நாடு கொள்கையை ஒத்திவைப்பதாக அண்ணா கூறினார். பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை ரஜினி அவரது பாணியில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது" என்றார்.

    இந்துவில் இருந்து மாறிய கிறிஸ்தவர்கள்

    இந்துவில் இருந்து மாறிய கிறிஸ்தவர்கள்

    மேலும் அவர் பேசுகையில், "மதுரை அருகே சத்திய முர்த்தி நகரில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக இதுவரை தனது கவனத்திற்கு வரவில்லை, இருப்பினும் இரு தரப்பு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அத்தி வரதர் தரிசனம்

    அத்தி வரதர் தரிசனம்

    அத்திவரதர் குளத்திற்க்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வைத்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்களின் வகுத்துள்ள சம்ரதாயம், சாஸ்திரபடி முடிவு செய்யப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்பது இந்து மக்களின் ஆதங்கமாக இருந்தாலும் சம்ரதாய, சாஸ்திரப்படிதான் முடிவு செய்யப்படுகிறது. அதனை அரசு நிறைவேற்றுகிறது. மாணவர்கள் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

    English summary
    what great leader anna told in 1962, now actor rajini said his style over kashmir issue, said by minister sellur raju
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X