மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கணேச சதுர்த்தி 2020: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எப்போது கொண்டாடப்படும் தெரியுமா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும். 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்குகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாவும் வட இந்தியாவில் கணேச சதுர்த்தியாகவும் கொண்டாடுகிறோம். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும். 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 6ஆம் தேதி ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக வைத்து பூஜைகள் செய்து படையல் போட்டு தினந்தோறும் பஜனைகள் பாடி வழிபடுவார்கள். விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு, குளங்கள், கடலில் விசர்ஜனம் செய்வார்கள். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட உள்ளது.

When is Ganesh Chaturthi in 2020 Pooja date

வி' என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகரின் பானை போன்ற வயிறு பிரம்மனின் அம்சமாகவும், அவரது முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடது பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலதுபாகம் சூரியனின் அம்சமாகவும் மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளங்குகிறது. எனவேதான் முழுமுதற்கடவுளாக விநாயகரை வழிபடுகின்றோம்.

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாவும் வட இந்தியாவில் கணேச சதுர்த்தியாகவும் கொண்டாடுகிறோம். விநாயகர் கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சூறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா ரத்து மும்பை லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் அறிவிப்புவிநாயகர் சதுர்த்தி விழா ரத்து மும்பை லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் அறிவிப்பு

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து காரியங்களுக்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு ஐங்கரன்' என்ற பெயரும் விநாயகருக்கு உண்டு. அவரை பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.

எந்த செயலை செய்யத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி எழுதப்படுகிறது. பிள்ளையார் சுழி ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து 'உ' என்று எழுதுவார்கள். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, வட்டத்தை 0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டினை நாதம் என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை நாதபிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக கூறப்படுகின்றது.

கொரோனா தொற்றில் இருந்து நாட்டினையும் மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்குவோம்.

English summary
Ganesh Chaturthi is a festival that celebrates the birthday of Lord Ganesha, This year celebrates on Saturday 22nd August 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X