மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் கணேசன் முருகனின் நண்பன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theif Murugan story Revealed

    மதுரை: யாருய்யா இந்த "பள்ளப்பட்டி கணேசன்".. என்பதுதான் கணேசனை பத்தின கேள்வியாக இருக்கிறது. இவர் எல்லாம் பெரிய பிரபலம் இல்லை.. கொள்ளைக்காரன்தான்!

    லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மெயின் குற்றவாளி முருகன்தான். இதில் அடுத்ததாக முருகனின் தம்பி சுரேஷ் பெயர் அடிப்பட்டு வந்தது.

    who is madurai ganesan

    ஆனால், நாளடைவில் சுரேஷைவிட மிஞ்சியது கணேசன் என்பவனது பெயர்தான். ஏற்கனவே மணிகண்டன், சுரேஷ், கனகவள்ளி உட்பட சிறையில் உள்ளனர்.. இவர்களை தவிர பலர் விசாரணை வளையத்துக்குள்ளும் உள்ளனர்.

    எனினும் கணேசன் பெயரை உச்சரித்தது முருகன்தான்.. அப்போதுதான் கணேசன் என்ற ஒருத்தனை பற்றியே போலீசாருக்கு தெரியவந்தது. முருகனின் வாக்குமூலத்தில், "நானும் கணேசனும்தான் சுவற்றில் ஓட்டை போட்டோம். உள்ளே குதித்தோம்.. நகைகளை அள்ளினோம்.. வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க வைத்தோம். எனக்கு 12 கிலோ நகை, கணேசனுக்கு 6 கிலோ, மிச்சம் 2 பேருக்கு 5 கிலோ நகைகளை, ஆத்தங்கரையில் வைத்து பிரித்து கொண்டோம்" என்று வாக்குமூலம் தந்தான்.

    அப்போதுதான் கணேசனை பற்றிய தகவல்களை போலீசார் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர். கணேசன் பள்ளப்பட்டியை சேர்ந்தவனாம். ஜெயில் மேட்.. அதாவது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கணேசனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு கைது செய்த போலீஸார் சேலம் ஜெயிலில் அடைத்துள்ளனர். அங்குதான் முருகன் கணேசனுக்கு அறிமுகமானான்.

    ஜெயிலுக்குள்ளேயே ஒருத்தருக்கொருத்தர் நண்பர்களாகிவிட்டனர். கைதி என்றாலும் கணேசனை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. முருகனுக்கே சில கேஸ்களில் கணேசன்தான் ஜாமீன் வாங்கி தந்திருக்கிறாராம். அந்த அளவுக்கு "திக் ஃப்ரண்ட்ஸ்"!

    இதற்கு பிறகுதான் கணேசனை முருகன் அளவுக்கு அதிகமாக நம்ப தொடங்கி உள்ளான். இப்போது மதுரையில் கைது செய்யப்பட்ட கணேசன் போலீஸ் கஸ்டடியில் உள்ளதால், முருகன் தொடர்பான பல செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Ganesan from Madurai is a close friend of gang leader Murugan. Trich Police are investigating him about Lalitha jewellery theft issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X