மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறும் 4 மணி நேரம் தான்... கூட்டணி தொடங்கி கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது வரை... அசத்திய ராகுல்..!

Google Oneindia Tamil News

மதுரை: ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக மதுரை வந்த ராகுல்காந்தி வெறும் 4 மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், தேர்தல் கூட்டணி தொடங்கி கட்சியினருக்கு உற்சாகம் கொடுத்தது வரை அசத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்கள் தான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், ஒரே விசிட்டில் இத்தகைய குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கி சென்றிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசி கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தி சென்றுள்ளார்.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தேசியக் கட்சித் தலைவர்களின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையன்று தமிழகத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள் ராகுலும், ஜே.பி.நட்டாவும். வந்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் தமிழகத்தை வானளவில் புகழ்ந்தும் சென்றிருக்கிறார்கள்.

பிம்பம் தகர்ப்பு

பிம்பம் தகர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் ஜல்லிக்கட்டை தடை செய்யும் வகையில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன எனவும் பாஜகவும், அதிமுகவும் கூறி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கட்சியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காகவே டெல்லியில் இருந்து நேற்று விசிட் அடித்தார் ராகுல்.

வந்த காரியம்

வந்த காரியம்

ராகுல்காந்தியின் இந்த ஜல்லிக்கட்டு விசிட் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு கோரி போராடியவர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வெறும் 4 மணி நேரம் மட்டுமே மதுரையில் இருந்தாலும் வந்த காரியத்தை கணக்கச்சிதமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார் ராகுல். ஜல்லிக்கட்டை பார்த்தோமோ புறப்பட்டோமா என்று மட்டுமில்லாமல் தமிழக கலாச்சாரத்தை காக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக கூறி அவனியாபுரத்தில் கைதட்டல்களை அள்ளினார்.

உதயநிதியுடன் சந்திப்பு

உதயநிதியுடன் சந்திப்பு

திமுக காங்கிரஸ் கூட்டணியில் முறிவு, காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுகிறது திமுக என கடந்த சில நாட்களாக ஆருடங்கள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணியை நேற்று உறுதிப்படுத்தி சென்றிருக்கிறார் ராகுல். அவனியாபுரம் விழா மேடையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்ததுடன் அவருடன் நட்பும் பாராட்டினார்.

ராகுல் பயணத்திட்டம்

ராகுல் பயணத்திட்டம்

இது ஒரு புறம் இருக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலரும் சோர்வடைந்து காணப்பட்ட நிலையில் ராகுலின் தமிழக பயணம் அவர்களுக்கு புத்துணர்வை கொடுத்திருக்கிறது. ராகுலை சந்திப்பதற்காக சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மதுரையில் நேற்று ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு கோணங்களிலும் பயனளிக்கும் வகையில் தனது பயணத்திட்டத்தை அமைத்திருந்தார் ராகுல்.

English summary
Who will benefit from Rahul's visit to Tamil Nadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X