மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை மாவட்ட அதிமுக மூன்றாக பிரிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

தேர்தல் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவே மதுரை மாவட்ட அதிமுக 3 ஆக பிரிக்கப்பட்டது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: தேர்தல் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவே மதுரை மாவட்ட அதிமுக 3 ஆக பிரிக்கப்பட்டது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில். மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் கூடுதல் கவனம் செலுத்தவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்து உள்ளார்கள்.

Why AIADMK split into three team in Madurai? explains Minister R B Udhayakumar

மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற உள்ளனர். மதுரை அதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளதாக ஊடக செய்திகள் வருகின்றன. உட்கட்சி, வெளிகட்சி பூசல் எனபது இல்லை. தேர்தலுக்காக அதிமுக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் கவனம் செலுத்தினாலும் 3 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இராஜ கண்ணப்பன் தேர்தல் காலத்தில் நடைபெறும் பரபரப்பை பயன்படுத்தி கொண்டார்.

அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சொக்ஷியின் காவலர்.. நாட்டு மக்களை காவலர் ஆக்க முயற்சிக்கிறார்.. ராகுல் அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சொக்ஷியின் காவலர்.. நாட்டு மக்களை காவலர் ஆக்க முயற்சிக்கிறார்.. ராகுல்

அதிமுகவுக்கு இராஜ கண்ணப்பன் திரும்பி வருவார். மதுரை தொகுதிக்கு தகுதியான நபர்களுக்கு நேர்காணல்களுக்கு வந்தாலும் திறமையான தகுதியான நபரான ராஜ்சத்யன் அறிவிக்கப்பட்டார். அதிமுகவில் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. சாமானியர்களே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார், ராஜ் சத்யன், ரவீந்திரநாத் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

தற்போதைய எம்.பி க்கள் சிறப்பாக செயல்பட்டு இருகின்றார்கள். கூட்டணி காரணமாக தற்போதைய எம்.பிக்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை, வலுவான, பாதுகாப்பான, எழுச்சியான கூட்டணி அமைந்து உள்ளது. பிரதமராக சென்ற முறை ஜெயலலிதாவை முன் நிறுத்தினோம். இந்த முறை மோடியை பிரதமராக முன் நிறுத்தி உள்ளோம், என தெரிவித்தார்

English summary
Why AIADMK splited into three team in Madurai? AIADMK explains Minister R B Udhayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X