மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையை காட்டிலும் இரட்டிப்பு மரணங்கள்.. கொரோனாவுக்கு மதுரை மீது மட்டும் ஏன் அத்தனை கோபம்?.. எம்பி

Google Oneindia Tamil News

மதுரை: சென்னையை காட்டிலும் மதுரையில் கொரோனாவால் இரட்டிப்பு மரணம் ஏற்படுவது ஏன் என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், கொரோனா பாதிப்புக்கு எதிராக மதுரை மற்றும் பிற தென் மாவட்டங்களில் அரசு எடுக்கும் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. பல முறைக்கு பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3000 பேராக இருந்த போது சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. மதுரையில் 51 ஆக இருந்தது.

 கொரோனா போயிரும்னத கூட பொறுத்துகிட்டோம்.. 13 முறை மெல்லனும், வல்லரசு ஆகலாம்னு விட்டீங்க பாரு ஒரு கதை கொரோனா போயிரும்னத கூட பொறுத்துகிட்டோம்.. 13 முறை மெல்லனும், வல்லரசு ஆகலாம்னு விட்டீங்க பாரு ஒரு கதை

மதுரை

மதுரை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000 இருந்த போது சென்னையில் பலி எண்ணிக்கை 42 ஆக இருந்தது. அது போல் மதுரையில் பலி எண்ணிக்கை 86 ஆக இருந்தது. ஒரே நோய்தான் ஆனால் சென்னையை காட்டிலும் மதுரையில் பலி எண்ணிக்கை இரட்டிப்பாவது ஏன்? மதுரை மீது கொரோனாவுக்கு அப்படி என்ன கோபம்?

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

நிர்வாகம் கவனக்குறைவாக இருப்பதால்தான் இந்த மரணங்கள் ஏற்படுகின்றன. சென்னையில் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்தவுடன் மற்ற மாவட்டங்களில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. சென்னையை சுற்றியுள்ள 5 மாவட்டங்களிலிருந்து 40 ஆம்புலன்ஸ்களும் 200 ஊழியர்களும் சென்னை வந்தனர்.

சென்னை

சென்னை

அவசர தேவை அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் கடந்த இரு வாரங்களால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அது போல் தென் மாவட்டங்களிலும் அது அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஒரு மாதமாகியும் ஆம்புலன்ஸ்களும் ஊழியர்களும் சென்னையிலிருந்து திரும்பி வரவே இல்லை. இதனால் மதுரையில் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கையாளவில்லை

கையாளவில்லை

ஒரு ஆம்புலன்ஸ் கிடைக்க 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. நடுராத்திரியில் ஆம்புலன்ஸை அழைத்தால் காலையில் வருகிறார்கள். ஆம்புலன்ஸ் சேவை தேவையை விட குறைவாகவே இருக்கிறது. ஆம்புலன்ஸ் பிரச்சினை மிகவும் அடிப்படையான ஒன்று. ஆனால் மாநில அரசு அதை முறையாக கையாளவில்லை.

3000 பேருக்கு சோதனை

3000 பேருக்கு சோதனை

நாங்கள் குரல் கொடுத்தபிறகு தினமும் மதுரையில் 2100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 3000 பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே நோயின் வேகம் கட்டுப்படுத்தப்படும். சென்னையை விட மதுரையில் மரணங்கள் நிகழ்வதற்கு காரணம் என்ன? நோயாளிகளை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதில் என்ன பிரச்சினை. இதற்கு தீர்வு காண மாநில அரசு எடுத்த முயற்சிகள் குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் சு வெங்கடேசன்.

English summary
Madurai MP Su Venkatesan asks Why deaths happen twice in Madurai? He needs CM to explain it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X