"காமம் + ஆபாசம்".. விடிகாலை 5 மணிக்கு அதிர்ந்து போன பெண் போலீஸ்.. கடைசியில் பார்த்தால்..!
மதுரை: கிட்டத்தட்ட 3 நாட்கள் கடுமையான தேடுதல் வேட்டை மேற்கொண்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் நடந்த சம்பவம் இது.. ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தந்தார்..
அதில், தனக்கு செல்போனில் ஆபாச அழைப்புகள் வருவதாகவும், அவர் யார் என்று தெரியவில்லை, தன்னை மிரட்டி பாலியல் தொல்லை தருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரியிருந்தார்.
EXCLUSIVE: என்னை தொட்டு பாஜக பிரமுகர் தள்ளிவிட்டாரு.. பாஜகவினர் யாருமே உதவல -பெண் செய்தியாளர் புகார்

குற்றவாளி
இதையடுத்து, அந்த புகாரின்பேரில், தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்... அதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணையை உடனடியாக மேற்கொண்டார். அப்போதுதான் அந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆபாசம்
பெண் போலீசிடம் ஆபாசமாக பேசியது இன்னொரு போலீஸாம்.. புகார் கொடுத்த பெண், மதுரை மாநகர ஆயுதப்படை மைதானம் 11-வது படைப்பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.. 25 வயதாகிறது.. மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்... கடந்த 12-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளார்.. விடிகாலை 5 மணிக்கு ஒரு போன் வந்துள்ளது.. மறுமுனையில் பேசியவர், எடுத்ததுமே அசிங்கமாக பேச ஆரம்பித்துள்ளார்..

நான் போலீஸ்
ஒவ்வொரு வார்த்தையும் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், யாருன்னு தெரியாம பேசுறே, நான் போலீஸ் என்று சொல்லி உள்ளார்.. அதைக் கேட்டபிறகும் அந்த இளைஞர், இன்னும் அசிங்கமாக பேச ஆரம்பித்துள்ளார்.. தொடர்ந்து பாலியல் வார்த்தைகளையும், கெட்ட வார்த்தைகளையும் பேசி மன உளைச்சலையும் அந்த பெண்ணுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

அட்ரஸ், செல்போன்
பிறகு, பெண் போலீசுக்கு வந்த செல்போன் அழைப்புகளை தல்லாகுளம் போலீசார் ஆய்வு செய்தனர்... அப்போதுதான் குற்றவாளியின் செல்போன் நம்பர், அட்ரஸ் கிடைத்தது.. அந்த அட்ரஸ், போன் நம்பர்களை வைத்து கொண்டு சம்பந்தப்பட்ட இளைஞரை தேடஆரம்பித்தனர்.. 3 நாட்களாக முயற்சித்தும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.. கடைசியில் பார்த்தால், பெண் போலீசிடம் பேசியவரும் ஒரு போலீஸாம்.. பரமக்குடியை சேர்ந்தவர்.. பெயர் மணிகண்டன்.. 25 வயதாகிறது.. மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்..

மணிகண்டன்
இதனால் அதிர்ந்து போன தல்லாக்குளம் போலீஸார், அவரை பிடித்து விசாரித்தனர்... மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பிற்கு, மணிகண்டன் வந்திருந்தார்.. அப்போது அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.. விசாரணையில் மணிகண்டன் சொல்லும்போது, அந்த பெண் போலீசின் செல்போன் நம்பரை பலரிடம் முயற்சித்து பிறகுதான் வாங்கினேன்.. சம்பவத்தன்று ஆபாசமாக பேசியது உண்மைதான்.. ஆனால் தண்ணி அடித்திருந்தேன்.. நைட் அடித்த தண்ணி.. விடியும் வரை தெளியவே இல்லை.. மதுபோதையில் அப்படி பேசிவிட்டேன் என்றார்.. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.