மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜிஎஸ்டி வரி குறைபாடுளை சுட்டிக் காட்டியதால் ப.சிதம்பரம் கைது.. திருமாவளவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜிஎஸ்டி குறைபாடுளை சுட்டிக் காட்டியதால் சிதம்பரம் கைது.. திருமாவளவன் des;

    மதுரை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால்தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.

    மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    why pc arrested explains thirumavalavan

    அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு உள்ளது, காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. காஷ்மீர் மக்களுக்காக ஆகஸ்ட் 30 ல் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    வேதாரண்யம் மோதல் தொடர்பாக வேடிக்கை பார்த்த காவல்துறை மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அம்பேத்கர் சிலை உடைப்பு சமூக அமைதிக்கு எதிரானது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. காவல்துறை ஒத்துழைப்போடு தான் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு உள்ளது.

    சிலை உடைப்பு கண்டித்து செப்டம்பர் 3 ல் என் தலைமையில் ஆர்ப்பாட்டம், மோடி தலைமையிலான அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. முதல்வர் வெளிநாட்டு பயணத்தால் பலன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பெரும் தொழில் அதிபர்கள்களுக்கு சலுகை செய்வதால் தொழில்துறை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஜி.எஸ்.டி வரியால் தொழில்துறை பாதிக்கப்பட்டு வேலை இழப்பு உண்டாகி உள்ளது. ஜி.எஸ்.டி வரியின் குறைகளை சுட்டி காட்டியதால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் சிலை உடைப்பை எதிர்க்க வேண்டும்.

    அண்டை மாநிலங்களில் அம்பேத்கர் மற்றும் அவரது சிலைகளை கவுரம் செய்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே அம்பேத்கர் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறது. லண்டனில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எந்த ஒரு சர்ச்சையும் நடக்கவில்லை. போராட்டங்களில் தனிநபர் விமர்சனங்களை முன் வைத்தால் அது கண்டிக்கத்தக்கது என்றார்.

    English summary
    Since P Chidambaram pointed out the mistakes of GST he has been arrested said VCK president Thirumavalavan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X