என்னங்க.. நானும் ஆனந்தும் கல்யாணம் செய்துக்கிட்டோம்.. அதிர வைத்த மனைவி.. விளைவு 2 உயிர் பலி!
மதுரை: 2 பெண் குழந்தைகள், கணவனை தவிக்க விட்டதுடன், அவர்களை தற்கொலை வரை கொண்டு செல்ல வைத்த மனைவி கீதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதி கருப்பையா - கீதா. இவர்களுக்கு 7 வயதில் ஹேமலதா என்ற மகளும், 6 வயதில் பிரதீபா என்ற மகளும் உள்ளனர்.
கருப்பையா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கீதா வீட்டிற்கு எதிரே ஒரு டீக்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இதில் கீதாவுக்கு ஆனந்த் என்பவருடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இதை அறிந்த கருப்பையா மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆனால் கீதா கேட்கவில்லை.
அம்மாவுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும்.. குடிக்க கூடாது.. வெஜிட்டேரியன் ஓகே.. சபாஷ் மகளே!

சண்டை
பலமுறை இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் திரும்பவும் போன வாரம் சண்டை வந்துள்ளது. இந்த விஷயம் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறது. 2 பேரையும் சமாதானம் செய்த போலீசார், கீதாவை மதுரையிலுள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கல்யாணம்
இதனிடையே வீட்டுக்கு வராமலேயே இருந்த கீதாவுக்கு கருப்பையா போன் பண்ணி பேசியுள்ளார். அதற்கு கீதா, நான் ஆனந்தகுமாரை கல்யாணம் செய்துக்கிட்டேன்.. இனி வீட்டுக்கும் வரமாட்டேன்" என்று சொல்லி உள்ளதாக தெரிகிறது.

மண்ணெண்ணெய்
அப்பா கூப்பிட்டதும் குழந்தைகளும் அவர் பின்னாடியே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றியுள்ளார். பிறகு கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு வெடிக்க செய்துவிட்டார் கருப்பையா. சிலிண்டர் வெடித்து சிதறியதில் கருப்பையாவும் மூத்த மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

ஹேமலதா
படுகாயங்களுடன் ஹேமலதா துடித்தாள். அவளை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 50 சதவீதம் உடல் எரிந்துள்ளது.. எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து டீக்கடையில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

தலைமறைவு
இதனிடையே கீதாவையும் ஆனந்தகுமாரையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர், கீதா, அவரது தந்தை பெரிய கருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் ஆனந்தை காணவில்லை. தலைமறைவாக உள்ளதால், அவரையும் தேடி வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!