மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மநீம ஒரு மாநில கட்சி.. எப்படி கூட்டணி வைப்போம்.. அட.. நீங்களா இப்படி சொல்வது !

Google Oneindia Tamil News

Recommended Video

    மநீம உடன் கூட்டணி கிடையாது - தேசிய பெண்கள் கட்சி

    மதுரை: மக்கள் நீதி மய்யம் மாநில கட்சி என்பதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தேசிய பெண்கள் கட்சி தெரிவித்துள்ளது.

    லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை ஆலோசனையில் இறங்கி உள்ளன.

    இந்நிலையில், தேசிய பெண்கள் கட்சியின் தலைவர் டாக்டர்.ஸ்வேதா ஷெட்டி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

     பெண்களுக்கான அதிகாரம்

    பெண்களுக்கான அதிகாரம்

    2012ம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக பெண்களுக்கான தேசிய அளவிலான கட்சியை தொடங்கியுள்ளோம். பெண்களுக்கான அதிகாரத்தை கேட்டு பெறுவதை விட நாமே அடையலாம் என்ற நோக்கத்தில் கட்சியை தொடங்கி இருக்கிறோம்.

    பெண்களுக்கு இட ஒதுக்கீடு

    பெண்களுக்கு இட ஒதுக்கீடு

    ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். தேசிய அளவில் எங்களின் கட்சிக்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    விழிப்புணர்வு வேண்டும்

    விழிப்புணர்வு வேண்டும்

    5 விழுக்காடுதான் வணிகத்தில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. அதனை அதிகரிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை.

    283 வேட்பாளர்கள் போட்டி

    283 வேட்பாளர்கள் போட்டி

    வரும் லோக்சபா தேர்தலில் 283 தொகுதிகளில் எங்களது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எங்களுடைய கொள்கைகளோடு இணைந்து செல்லும் ஆண்கள் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள்.

    கூட்டணி கிடையாது

    கூட்டணி கிடையாது

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு மாநில கட்சி என்பதால் தேசிய கட்சியான நாங்கள் அவரோடு கூட்டணி வைக்க மாட்டோம். பொருளாதார பின்னணியின்றி உருவான ஆம்ஆத்மி , பகுஜன்சமாஜ் கட்சியை போன்று எங்களது கட்சியை உருவாக்குவோம் என்று அவர் கூறினார்.

    English summary
    We wont go alliance with kamalhaasans makkal neethi maiam says National Women's Party leader Swetha shetty.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X