மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னலட்சுமியும்.. யோகதர்ஷினியும்.. பரபர ஜல்லிக்கட்டு களத்தில் மாஸ் காட்டிய இளம் தமிழ்ப்பெண்கள்.. செம

By
Google Oneindia Tamil News

மதுரை: மாட்டுப் பொங்கல் தினத்தில் தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்த பெண்களை சமூக வலைதளங்கள் கொண்டாடி வருகின்றது.

Recommended Video

    Palamedu Jallikattu: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.

    தை பிறந்து தமிழர்கள் திருநாள் உலகமெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் விழா எடுத்து கொண்டாடி வருகிறார்கள். ஆட்டம் பாட்டம் என விழாக்கோலம் பூண்டிருக்கிறது தமிழக கிராமங்கள்.

    பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். இந்த வருடம் கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு பல கட்டுப்பாடுகளுடன் நடந்தது. பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர்.

    எப்போதும் போல் காளைகள் சீற, அதை காளையர்கள் அடக்கி வெற்றி வாகை சூடுவது வழக்கம். ஜல்லிக்கட்டு விழா நடக்கும் இடம் முழுதும் ஆண்களால் நிறைந்திருக்கும். பார்வையாளர்கள் மாடங்களில் மட்டும் தான் பெண்கள் இருப்பார்கள்.

     'நீங்கள் இறந்துவிடுவீர்கள்'.. போலீசை சாபமிட்டதால் வந்த வினை.. மற்றொரு சாமியார் கைதின் பின்னணி 'நீங்கள் இறந்துவிடுவீர்கள்'.. போலீசை சாபமிட்டதால் வந்த வினை.. மற்றொரு சாமியார் கைதின் பின்னணி

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    ஆனால், இந்த வருடம் அதையெல்லாம் உடைத்து களத்தில் பெண்களைக் காண முடிந்தது. ஜல்லிக்கட்டு வீரர்களால் இல்லாமல், சீறி வரும் காளைகளை உற்சாகம் செய்யும் இடத்தில் இருந்து, அடக்கமுடியாத காளைகளை அன்பால் அடக்கி அழைத்துச்செல்லும் இடத்தில் நேற்று சில பெண்களைப் பார்க்க முடிந்தது. களத்தில் நின்ற இந்த பெண்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்தனர்.

    பாலமேடு

    பாலமேடு

    மாட்டுப் பொங்கல் தினத்தில் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இதில் 15 வயது இளம்பெண் அன்னலட்சுமியின் காளை சீறி பாய்ந்தது. மாடு பிடிபடாததையடுத்து, காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அன்னலட்சுமிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் இறங்கி வீரர்களுக்கு சவால்விடும் வகையில் துணிச்சலாக துண்டு சுற்றி, சீறிப்பாயப்போகும் தன் காளையை உற்றாசப்படுத்திய அன்னலட்சுமி பலருக்கு ரோல்மாடலாக திகழ்ந்தார்.

    அன்னலட்சுமி

    அன்னலட்சுமி

    அவருக்கு வீரத்தமிழச்சி பட்டம் கொடுத்து, அமைச்சர் மூர்த்தி பாராட்டி தங்ககாசை பரிசாக வழங்கினார். நேற்றைய ஜல்லிக்கட்டில், மதுரை யோகதர்ஷினி என்ற இளம்பெண்ணின் மாடும் போட்டியில் பங்கெடுத்தது. ஆனால், மாடு பிடிபட்டது. சிறப்பாக இவ்வளவுதூரம் மாட்டை அழைத்துவந்த யோகதர்ஷினியைப் பாராட்டி அமைச்சர் பரிசு வழங்க அழைத்தார். ஆனால் அதை மறுத்துவிட்டு காளையுடன் சென்றார் யோகதர்ஷினி.

     வீரத்தமிழச்சிகள்

    வீரத்தமிழச்சிகள்

    கடந்த ஆண்டும் இதுபோல பரிசை அவர் மறுத்து சென்றதையும், தற்போது நடந்த சம்பவத்தையும் பகிர்ந்து யோகதர்ஷினியை சமூக வலைதளங்கள் கொண்டாடி வருகின்றன. இதேபோல் நேற்று நடந்த போட்டியில், பல பெண்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். மதுரை சுற்றுவட்டாரத்தில் இருந்து, சோளாங்குருணி சுகந்தியின் காளையும் களம் கண்டது. அதேபோல் பத்தாவது படிக்கும் மாணவி சுவேதாவின் காளையும் சீறிப்பாய்ந்து வெற்றி கண்டது.

    பாட்டி

    பாட்டி

    அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த இரண்டு பாட்டிகள் பார்வையாளர் மாடத்தில் நின்று சீறிப்பாயும் காளைகளையும் அதை அடக்கும் காளையர்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு பாட்டி மிகுந்த உற்சாகத்துடன் இருந்ததால் அவரை முக்கியஸ்தர்கள் அமரும் இடத்துக்கு அழைத்து வந்தனர். தன்னுடைய கைக்குட்டையை தூக்கி ஆர்பரித்து ஆடிப்பாடி உற்சாகப்படுத்தினார்கள் பாட்டிகள். பெண்கள் இப்படி ஜல்லிக்கட்டில் கவனம் ஈர்த்தது இணையம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Young women's bulls participating in the Madurai Jallikattu function. Most of the bulls won the prize.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X