For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களின் சபரிமலையில் சக்கர தீ வெட்டி திருவிழா.. மண்டைக்காட்டில் கோலாகலம்!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கோலாகலமாக நிறைவடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.

mandaikadu bhagavathi amman temple masikodai festival over

கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு அம்மனை தரிசித்து செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

mandaikadu bhagavathi amman temple masikodai festival over

Also Read | வாழ்த்துகள் செல்லங்களே.. இன்று 10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்.. 9 லட்சம் பேர் பங்கேற்பு!
இந்த கோயிலில் வருடா வருடம் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த வருட மாசிக்கொடை விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாளான நேற்று பெரிய சக்கர தீ வெட்டி முன் பவனியாக வந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

mandaikadu bhagavathi amman temple masikodai festival over

நேற்றிரவு பெரிய சக்கர தீ வெட்டியுடன் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான கேரளா பக்கதர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரிய சக்கர தீ வெட்டி ஏற்பாடுகள் அனைத்தையும் தலைவர் ராஜகுமார் ஏற்பாடு செய்து அவரே சுமந்து சென்று பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்து சிறப்பித்தார்.

mandaikadu bhagavathi amman temple masikodai festival over
English summary
Mandaikadu Bhagavathi Amman Temple masi kodai festival has ended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X