மங்களூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்வு எழுத அனுமதிக்காததால் 3ம் ஆண்டு பி.இ. மாணவர் தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்வு எழுத அனுமதிக்காததால் பி.இ.மாணவர் தற்கொலை- வீடியோ

    மங்களூரு: கர்நாடகாவில் 20 வயது பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சூரத்கல்லில் என்.ஐ.டி. கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்தவர் ஆனந்த் பதக்(20). மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த அவரை பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    20-year-old NIT-K student commits suicide

    ஆனந்த் சரியாக வகுப்புகளுக்கு செல்லாததால் அந்த பேராசிரியர் அவரை திட்டி வந்துள்ளார். மேலும் ஆனந்தை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ஆனந்த் தனது டிபார்ட்மென்ட் கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பிற மாணவர்கள் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.

    டெல்லியில் 2 வயது பெண் குழந்தையை கடத்தி, சீரழித்த போதை வாலிபர் டெல்லியில் 2 வயது பெண் குழந்தையை கடத்தி, சீரழித்த போதை வாலிபர்

    பேராசிரியரை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    A 20-year-old student named Anand Pathak, jumped to death form National Institute of Technology-Karnataka (NIT-K) building after he was not allowed to write exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X