மங்களூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம்: மங்களூருவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி

Google Oneindia Tamil News

மங்களூரு: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மங்களூருவில் போராட்டம் நடத்தியவர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

CAA Protest: Mangaluru Police fire shots in air

மேற்கு வங்கம், தமிழகம், உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் போராட்டங்களை தடை செய்யும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும் இத்தடை உத்தரவை மீறி பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. மங்களூருவில் நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.

இதனையடுத்து பண்டாரு காவல் நிலைய பகுதியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

ஆனால் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மங்களூருவில் 6 காவல்நிலைய எல்லைப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் விளக்கம்

முன்னதாக மங்களூரு போலீஸ் கமிஷனர் பி.எஸ். ஹர்ஷா கூறுகையில், போராட்டக்காரர்களுடனான மோதலில் 20 போலீசார் படுகாயமடைந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The police fired shots in the air in Mangaluru amid protests over the Citizenship Amendment Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X