• search
மங்களூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

முஸ்லீம் நண்பர்களுடன் வந்த பெண்கள்.. மாணவர்களை துன்புறுத்திய வலதுசாரி கும்பல்.. கர்நாடகா ஷாக்!

Google Oneindia Tamil News

மங்களூரு : கர்நாடகா மாநிலம் மங்களூருவில் , முஸ்லிம் நண்பர்களுடன் வந்ததற்காக பெண்கள் உள்பட மருத்துவ மாணவர்கள் குழுவினரை இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக ஒழுக்க கேடாக வந்ததாக கூறி, துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் முஸ்லிம் ஆண்களுடன் காதல் கொள்ளும் அல்லது நட்பு பாராட்டும் பெண்கள் அல்லது முஸ்லீம் பெண்களுடன் காதல் கொள்ளும் அல்லது நட்பு பாராட்டும் ஆண்கள் வலதுசாரி அமைப்பினர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது,.

கடந்த மார்ச் மாதம், 23 வயதான அஸ்வித் அன்வர் முகமது என்ற முஸ்லீம் நபர் தனது இந்து நண்பருடன் மங்களூருவில் இருந்து பெங்களூரு சென்றதற்காக கத்தியால் குத்தப்பட்டார். நான்கு பஜ்ரங்தளம் நிர்வாகிகள் இதற்காக கைது செய்யப்பட்டனர்.

பள்ளிகள் திறப்பு உள்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 3 முக்கிய தளர்வுகள்.. முழு விவரம் பள்ளிகள் திறப்பு உள்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 3 முக்கிய தளர்வுகள்.. முழு விவரம்

மாணவர்கள்

மாணவர்கள்

இதேபோல் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பந்த்வாலில், கரிஞ்சா கோவிலுக்குச் சென்ற ஆறு துணை மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக மாணவர்களை தவறாக தடுத்து. தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சில வலதுசாரிகள் கைது செய்யப்பட்டனர்.

தாக்கப்பட்டார்

தாக்கப்பட்டார்

செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், பெங்களூருவைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது நண்பர்களுடன் தக்ஷிணா கன்னடா மாவட்டம் புத்தூரில் ஒரு முஸ்லீம் ஆணுடன் பேசியதற்காக தாக்கப்பட்டார். அதே சமயத்தில், பெங்களூருவில் வேலை முடிந்து திரும்பும் போது பைக்கில் ஒன்றாக பயணித்ததற்காக ஒரு முஸ்லீம் பெண்ணும் அவளது உடன் பணியாற்றிய இந்து ஆணும் தாக்கப்பட்டனர்.

ஐந்தாவது சம்வம்

ஐந்தாவது சம்வம்

பின்னர் இந்த வழக்கில் இரண்டு பேர் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வலது சாரி அமைப்பினரால் ஏற்கனவே 4 முறை கர்நாடகாவில் இப்படியான சம்பவங்கள் நடந்த நிலையில், ஐந்தாவதாக ஒரு சம்பவம் மங்களூரு பகுதியில் நடந்துள்ளது.

காரை நிறுத்தினர்

காரை நிறுத்தினர்

இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களின் கூற்றின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை மல்பே கடற்கரையில் இருந்து இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் ஆறு பேர் காரில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள் தொண்டர்கள் சிலர், சூரத்கல் செக்போஸ்ட்டில் தங்கள் காரை நிறுத்தி உள்ளனர்.

துன்புறுத்தல்

துன்புறுத்தல்

மாணவர்களின் பெயர்களைக் கேட்டது, அதில் முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வந்ததற்காக உடன் வந்த பெண்களை துன்புறுத்தி உள்ளனர். உடன் வந்த நபர்கள் முஸ்லிம் ஆண்கள் என்பதற்காக மாணவர்களை துன்புறுத்த தொடங்கினர். இதையடுத்து அப்போது அங்கிருந்த போக்குவரத்து ஆய்வாளர் ஷெரீப்பிடம் மாணவர்கள் கூறியுள்ளனர்.

 என்ன செய்தனர்

என்ன செய்தனர்

பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மங்களூரு போலீஸ் கமிஷனர் என் சசி குமார், புகார்தாரர்கள் சுற்றுலா சென்று திரும்புவதாக கூறியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் கூறினார். அவர்கள் மாணவர்களின் பெயர்களைக் கேட்டு அவர்களைத் தாக்கினர். வாகனத்தில் சில இளைஞர்கள் முஸ்லீம்கள் என்பதால், அதில் வந்த பெண்கள் உள்பட மாணவர்கள் குழுவினரை துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடந்தது உண்மை என்பது உறுதியானது.

பஜ்ரங் தளம்

பஜ்ரங் தளம்

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ப்ரீதம் ஷெட்டி, அர்ஷித், ஸ்ரீனிவாஸ், ராகேஷ் மற்றும் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். அவரகள் மீது IPC பிரிவுகள் 341 (தவறான கட்டுப்பாடு), 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியது) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பிற மத ஆண் அல்லது பெண் உடன் சேர்ந்து பயணிக்கும் நபர்களை தாக்குவது இது ஐந்தாவது சம்பவம் ஆகும்.

English summary
Five Bajrang Dal members have been arrested in Karnataka’s Mangaluru city for heckling a group of medical students, news report by Indian Express.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X