மங்களூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் பகீர்.. பாபர் மசூதி இடிப்பு காட்சியை நடித்து காட்டிய பள்ளி மாணவர்கள்!

Google Oneindia Tamil News

மங்களூரு: கர்நாடகாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் பாபர் மசூதி இடிப்பு காட்சியை பள்ளி மாணவர்கள் நடித்து காட்டியது சர்ச்சையாகி உள்ளது.

மங்களூரு அருகே கல்லாட்காவில் ஶ்ரீ ராம வித்யா கேந்திரா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை கடலோர கர்நாடகாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் கல்லாட்கா பிரபாகர் பகத் நடத்தி வருகிறார்.

Karnataka School Students Re-enact Babri Masjid Demolition

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மாணவர்கள் படித்து தெளிவு பெற வேண்டும்: அமித்ஷா அப்பீல்குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மாணவர்கள் படித்து தெளிவு பெற வேண்டும்: அமித்ஷா அப்பீல்

இப்பள்ளியில் கிரீதோட்சவா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.

அதில், பாபர் மசூதி இடிப்பை விளக்கும் வகையில் மாணவர்கள் செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினர். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இளைஞர் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒய்.பி ஶ்ரீவத்சா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவரால் கர்நாடகாவில் நடத்தப்படும் பள்ளியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மாணவர்கள் விளக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

English summary
Mangalore.Sri Rama Vidya Kendra Students Re-enacted the Babri Masjid Demolition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X