மங்களூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 வயதில் 23 கோடிக்கு அதிபதியான இளைஞர்... எப்படி சாத்தியம்?

Google Oneindia Tamil News

கர்நாடகா: மங்களூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் முகமது பயாஸ் என்பவர் ஒரே இரவில் 23 கோடி ரூபாய்க்கு அதிபராகி அவரது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். நடுத்தர குடும்பத்தில் பிறந்த வளர்ந்த இவர் மும்பையில் உள்ள நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டன்ட் ஆக பணி புரிந்து வருகிறார்.

இவர் தான் ஒரே இரவில் 23 கோடி ரூபாய்க்கு அதிபராகி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆன்லைனில் லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டவர் பயாஸ்.

ரூ.23 கோடி

ரூ.23 கோடி

இந்நிலையில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு முதல் பரிசான 23 கோடி ரூபாய் (12 மில்லியன் திர்ஹம்) கிடைத்துள்ளது. பிக் டிக்கெட் நிறுவனத்தில் இருந்து பரிசு கொடுப்பதற்காக பல முறை அழைக்கப்பட்டும் பயாஸ் அந்த அழைப்புகளை ஏற்கவில்லையாம். தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வருகிறதோ என நினைத்து அபுதாபியில் இருந்து வந்த அழைப்புகளை ஏற்கவில்லையாம்.

அபுதாபி பயணம்

அபுதாபி பயணம்

பின்னர் தொடர்ந்து அழைக்கப்பட்டதால் பேசித்தான் பார்ப்போம் என அழைப்பை ஏற்றுள்ளார் பயாஸ். அப்போது அவரது லட்டரி டிக்கெட் எண்ணான 059070-க்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை நம்பாத அவர், பின்னர் ஆன்லைனில் உறுதி செய்துவிட்டு மேற்கொண்டு பேசியிருக்கிறார். விரைவில் அந்தப்பணத்திற்கான காசோலை பெறுவதற்காக பயாஸ் அபுதாபி செல்லவிருக்கிறார்.

குடும்பசூழல்

குடும்பசூழல்

இதனிடையே தன்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளில் ஒருவரை திருமணம் செய்து கொடுத்துவிட்டதாகவும், இளைய சகோதரியை படிக்க வைத்து வருவதாக கூறியுள்ளார் பயாஸ். தமது மூத்த சகோதரியை திருமணம் செய்து கொடுத்த போது பொருளாதார நிலை தங்கள் குடும்பத்தில் மோசமாக இருந்ததாகவும், சிரமப்பட்டுதான் திருமணச் செலவுகளை செய்தாகவும் தெரிவித்துள்ளார்.

பெருந்தன்மை

பெருந்தன்மை

ஆன்லைன் லாட்டரி வாங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லாத சூழலில், ரூம்மேட்டும் தானும் இணைந்து அந்த லாட்டரி சிட்டை வாங்கியதாகவும், இதனால் பரிசுத்தொகையில் பாதி தொகையை அவருக்கும் கொடுக்க உள்ளதாக கூறியிருக்கிறார் பயாஸ். மேலும், குடும்பத்தில் உள்ள கடன்களை அடைத்து இளைய சகோதரியை நன்கு படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பேன் என பொறுப்புணர்வுடன் தெரிவிக்கிறார் பயாஸ்.

English summary
Karnataka young man fayaz earning Rs 23 crores overnight
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X