மெல்போர்ன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களை துரத்தி துரத்தி மூர்க்கமாக கத்தியால் குத்திய நபர்.. ஒருவர் பலி.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மர்ம நபர் மக்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மர்ம நபர் மக்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.

மெல்போர்ன் அருகே இருக்கும் போர்னே சிட்டி மால் வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு காரில் வேகமாக வந்த நபர் ஒருவர் வெளியே இருந்த கார்கள் மீது தனது கார் மூலம் மோதியுள்ளார். இதையடுத்து போலீசுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

1 dead and 4 injured in Melbourne stabbing attack, attacker injured in police firing

போலீஸ் வருவதற்குள் இவர் நிறைய கார் மீது தனது கார் மூலம் மோதியுள்ளார். இதையடுத்து இவரின் கார் தீ பிடித்து இருக்கிறது. இதையடுத்து காரில் இறந்து இறங்கியவர், மக்களை துரத்தி துரத்தி தாக்கியுள்ளார்.

கையில் இருந்த கத்தியை வைத்து மக்களை துரத்தி துரத்தி குத்தியுள்ளார். அவரை தடுக்க வந்த போலீசையும் கத்தியால் தாக்கி உள்ளார்.

இவரின் மோசமான தாக்குதலில் ஒருவர் பலியானார். இதில் 4 பேர் கடுமையாக காயமடைந்தனர். இவர் ஏற்கனவே சில இடங்களில் மக்களை குத்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். போலீசார் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நபரை சுட்டு பிடித்தனர். இவரது உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கி காயம் உள்ளது.

சர்கார் விவகாரத்தில் அரசுக்கு, உயர் நீதிமன்றம் குட்டு.. நீதிபதி கருத்தால் கோர்ட்டில் சிரிப்பலை! சர்கார் விவகாரத்தில் அரசுக்கு, உயர் நீதிமன்றம் குட்டு.. நீதிபதி கருத்தால் கோர்ட்டில் சிரிப்பலை!

இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஏன் இப்படி மூர்க்கமாக நடந்து கொண்டார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவருக்கு எதுவும் தீவிரவாத தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறார்கள்.

English summary
1 dead and 4 injured in Melbourne stabbing attack, attacker injured in police firing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X