மெல்போர்ன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ‘மனித பல்’.. விமானப் பயணிகள் அதிர்ச்சி.. விசாரணைக்கு உத்தரவு!

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் மனித பல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, கடந்த வாரம் பிப்ரவரி 27ம் தேதி, நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

singapore airlines investigating after passenger finds tooth in plane meal

அப்போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில், பிராட்லி பெத்தான் என்ற பயணியின் உணவில் கல் போன்ற ஏதோ ஒன்று வாயில் அகப்பட்டுள்ளது. கல்லாக இருக்கும் என அதனை எடுத்துப் பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது ஒரு மனிதப் பல்.

உடனடியாக இது தொடர்பாக விமான ஊழியர்களிடம் பிராட்லி புகார் அளித்தார். தங்களது தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம், பிராட்லியிடம் மன்னிப்பு கோரியது.

புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி

மேலும் அவருக்கு இழப்பீடாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 75 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம்) மதிப்பிலான இலவச கூப்பனை வழங்கியுள்ளது.

ஆனபோதும், விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் எப்படி மனித பல் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Singapore Airlines on Wednesday (Feb 27) said it is investigating after a passenger on one of its flights said he found a human tooth in his in-flight meal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X