மெல்போர்ன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயக விரோதமானது.. பெரியார் பழமொழியை எடுத்துக்காட்டி விஜய் சேதுபதி அசத்தல்!

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். பெரியாரின் பழமொழியை குறிப்பிட்டு விஜய் சேதுபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

இது தொடர்பாக நேற்று ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதே சமயம் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி இதில் கருத்து தெரிவித்துள்ளார்.

எங்கு

எங்கு

ஆஸ்திரேலியாவிற்கு விருது விழாவிற்கு சென்று இருந்த விஜய் சேதுபதி சர்வதேச தமிழ் வானொலி ஊடகம் ஒன்றுக்கு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேட்டி அளித்தார். காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு செய்த நடவடிக்கை தவறு என்று அவர் வெளிப்படையாக குரல் கொடுத்து பேசினார். இது உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அவர் தனது பேட்டியில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அப்போதே அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லிவிட்டார்.

வீட்டு

வீட்டு

அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் தருகிறது என்று மிகவும் உருக்கமாக பேட்டி அளித்து இருந்தார்.

 மக்கள் பக்கம்

மக்கள் பக்கம்

பொதுவாக விஜய் சேதுபதி சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது வழக்கம். முக்கியமாக தமிழர் சார்ந்த பிரச்சனைகளில் தமிழக மக்களுடன் இவர் சேர்ந்து பேசி இருக்கிறார். அதேபோல் தற்போது காஷ்மீர் பிரச்சனையிலும் பெருவாரியான தமிழக மக்களின் குரலுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.

English summary
Tamil Actor Vijay Sethupathy condemns the removal of Article 350.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X