மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவினால் உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது- ஹூ கவலை

தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உலக மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் தெரிவித்துள்ளார்.

10% may have been infected globally: WHO

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் உலக மக்கள் எப்போது மீள்வார்கள் என்று எவராலும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புகள் தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன், கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும் எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காக்கவும் வழிகள் உள்ளன.
இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிர்களை காக்க முடியும். தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமார் 10 சதவிகிதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்

தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றும் மைக்கேல் ரையன் கவலை தெரிவித்துள்ளார்.

English summary
The WHO executive board on the Covid pandemic, India called for an urgent and impartial review of lessons learnt from the world body-led global disease response amid more than a million global deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X