மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாட்கள் நடந்த ஆபரேஷன்.. அதிர வைத்த அட்டாக்.. 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று!

மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றோடு 10 வருடம் முடிந்துவிட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டையே அதிர வைத்த மும்பை தாக்குதல் நடைபெற்ற தினம் இன்று

    மும்பை: மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றோடு 10 வருடம் முடிந்துவிட்டது.

    அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள், பின்லேடன் மூலம் விமானம் வைத்து 2001 செப்டம்பர் மாதம் 11ம் தேதி தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலை இப்போதும் உலகம் 911 என்று நினைவு கூறுகிறது.

    ஆனால் அதைவிட பல நூறு மடங்கு கொடூரமான தாக்குதலை இந்தியா சமாளித்தது. கடந்த 2008 நவம்பர் மாதம் 26ம் தேதி லஸ்கர் இ தொய்பா மூலம் மும்பையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் ஆகும்.

    எப்படி தாக்கினார்கள்

    எப்படி தாக்கினார்கள்

    லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், கடல் வழியாக, மீனவர்களை கொன்றுவிட்டு, படகுகளை திருடி மும்பைக்கு வந்தனர். இவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நவம்பர் 26ம் தேதி மாலை தங்கள் ஆபரேஷனில் களமிறங்கினர்.

    முதல் தாக்குதல்

    முதல் தாக்குதல்

    இவர்கள் முதலில் தாக்குதல் நடத்தியது, மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான். இந்த தாக்குதலில் 58 பேர் பலியானார்கள். 120 பேர் காயம் அடைந்தனர். அஜ்மல் கசாப் வழிநடத்திய இந்த தாக்குதலை மூன்று தீவிரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதல் 90 நிமிடம் நீடித்தது.

    அடுத்தடுத்து நடந்த தாக்குதல்

    அடுத்தடுத்து நடந்த தாக்குதல்

    இந்த தாக்குதல் நடந்த இரண்டு நிமிடத்தில் மும்பையில் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டினர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தினார்கள். 25 பேர் வரை இந்த தாக்குதலில் பலியானார்கள். இதில் இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஹோட்டல்களில் தாக்குதல்

    ஹோட்டல்களில் தாக்குதல்

    அதன்பின் தீவிரவாதிகள் வெளிநாட்டினர் வசிக்கும் பெரிய ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினர். தாஜ் ஹோட்டல் , ஓரியண்ட் ஹோட்டல் ஆகிய ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தீவிரவாத எதிர்ப்பு படை ஸ்பெஷலிஸ்ட் ஹேமன்த் கார்கரே உள்ளிட்ட முக்கிய ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

    பெரும் போராட்டம்

    பெரும் போராட்டம்

    இதில் தாஜ் ஹோட்டலிலும், ஓரியண்ட் ஹோட்டலிலும் நடந்த தாக்குதல்தான் மிகப்பெரிய போராட்டமாக மாறியது. ஹோட்டலுக்கு உள்ளே பிணைக்கைதிகள் நூற்றுக்கணக்கில் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். பலர் இதில் வெளிநாட்டினர். பாதுகாப்பு படை வீரர்கள் மூன்று நாட்களாக இவர்களை மீட்கவும், தீவிரவாதிகளை சுட்டுக் கொள்ளவும் போராடினார்கள்.

    தொடர்ச்சியாக கொன்றனர்

    தொடர்ச்சியாக கொன்றனர்

    நாட்கள் செல்ல செல்ல இந்த செய்தி உலகம் முழுக்க தலைப்பு செய்தியானது. வெளிநாட்டினர் மாட்டி இருந்த காரணத்தால், இந்த தாக்குதல் இந்திய இறையாண்மைக்கு பெரிய பிரச்சனை ஆனது. தீவிரவாதிகளை எப்படி பிடிப்பது என்றும் தெரியாமல் தீவிரவாத எதிர்ப்பு படை கஷ்டப்பட்டு வந்தது.

    மூன்று நாட்கள்

    மூன்று நாட்கள்

    இந்த தாக்குதல் நவம்பர் 29ம் தேதி வரை நடந்தது. தீவிரவாதிகள் மூன்று ஹோட்டல்களிலும் வைத்திருந்த பிணைக்கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க விடுவித்தனர். 300க்கும் அதிகமான பிணைக்கைதிகள் இதில் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். இதில் வெளிநாட்டினர் அதிக அளவில் பிணை கைதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    10 வருடம் ஆகிவிட்டது

    10 வருடம் ஆகிவிட்டது

    தாக்குதலின் முடிவில் தீவிரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் இதில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கசாப்பிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 160 பேர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    10 years of Terror's Terror: The Story of 26/11 Mumbai attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X