மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்

    மும்பை: பொருளாதார தலைநகரான மும்பையில் 4 மாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

    மும்பை டோங்கிரி பகுதியில் அமைந்திருந்தது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 மாடி கட்டடம் ஒன்று. கடந்த சில நாட்களாகவே மும்பையில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த பழமையான கட்டடம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    100 year old building collapses in Mumbai.. The number of casualties rose to 14

    இந்த கட்டடத்தில் 15 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். சேசாபாரி என்ற பெயர் கொண்டது குறிப்பிட்ட பழமையான கட்டடம். இந்நிலையில் நேற்று அந்த பழமையான 4 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் கட்டடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். கட்டட விபத்து பற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டட விபத்து நிகழ்ந்த தெருவானது மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உடனடியாக வாகனங்களுடன் வர இயலவில்லை.

    பின்னர் சிறிது நேரம் கழித்து மீட்பு பணிகள் துவங்கின 15 குடும்பங்களை சேர்ந்த சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது. தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர், சுமார் 12 பேரது சடலங்களை நேற்று மீட்டிருந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

    இந்நிலையில் தற்போது இந்த கட்டட விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இரு சிறுவர்களது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே கட்டட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என மோப்ப நாய் உதவியுடன் கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    English summary
    The death toll has risen to 14 when a four-storey building collapsed in the capital city of Mumbai yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X