மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல் பரபரப்புக்கிடையே இன்று மும்பை தாக்குதல் 11-வது நினைவு தினம் அனுசரிப்பு #MumbaiTerrorAttack

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று மும்பை தாக்குதல் 11-வது நினைவு தினம் அனுசரிப்பு

    மும்பை: மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் பரபரப்புக்கிடையே மும்பை தாக்குதலின் 11-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள 26/11 தாக்குதல் நினைவிடத்தில் ஆளுநர் கோஷ்யாரி, முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல்வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிக கொடூரமான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    11th anniversary of 26/11 attack: Maharashtra Governor and CM to pay tribute

    கடல்வழியாக ஊடுருவிய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டார். அஜ்மல் கசாப்புக்கு 2012-ல் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

    உலகையே உலுக்கிய இந்த தாக்குதலின் 11-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் இத்தாக்குதலில் பலியானோர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    English summary
    Maharashtra Chief Minister Devendra Fadnavis and Governor Bhagat Singh Koshyari to pay tribute at Police Memorial at Marine Drive on 11th anniversary of 26/11 terror attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X