மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெட்ரோ ரயில் திட்டம்.. மும்பையின் நுரையீரல் பகுதி மரங்களை வெட்ட எதிர்ப்பு.. 144 உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    நுரையீரல் பகுதி மரங்களை வெட்ட எதிர்ப்பு... தீவிரமடையும் போராட்டம் -வீடியோ

    மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் உயர்ந்து கொண்டே வரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு சாலை மார்க்க பயணங்களை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரயில் வழித் தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    144 imposed in Mumbais Aarey colony, 38 protestors arrested

    இதன்படி மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனியில் உள்ள வனப்பகுதியில் 2, 700 மரங்களை வெட்ட கிரேட்டர் மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.

    144 imposed in Mumbais Aarey colony, 38 protestors arrested

    இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஹைகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து மரங்களை வெட்டும் பணி நேற்று நள்ளிரவே தொடங்கியது. இதனால் மரம் வெட்டும் இயந்திரங்கள், புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் வரும் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த மரம் வெட்டும் உத்தரவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு சற்று ஆறுதலை தருகிறது.

    English summary
    Police imposed 144 in Mumbai's aarey colony after strong protest against falling of trees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X