மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்டவாளத்தில் தூங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்.. வேகமாக மோதிய ரயில்.. மகாராஷ்டிராவில் 17 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Aurangabad Train | அவுரங்காபாத் கொடூரம் பற்றி விளக்கிய ரயில் ஓட்டுநர்

    கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பிற மாநில தொழிலாளர்கள் உணவு இன்றி மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா தாக்குதல் படுதீவிரம்- மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து 3-வது இடத்தில் குஜராத் கொரோனா தாக்குதல் படுதீவிரம்- மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து 3-வது இடத்தில் குஜராத்

    வழக்கம்

    வழக்கம்

    ஆனால் சில மாநிலங்களில் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. அதேபோல் இதற்கு அதிக கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது வழக்கமாகி உள்ளது. பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்லும் இவர்கள், சாலையிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் உறங்குவது வழக்கமாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் அசம்பாவிதம்

    மகாராஷ்டிராவில் அசம்பாவிதம்

    இந்த நிலையில்தான் வெளிமாநில ஊழியர்கள் தண்டவாளத்தில் உறங்கும் போது மகாராஷ்டிராவில் பெரிய அசம்பாவிதம் நடந்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் மகாராஷ்டிராவில் ஜல்னா பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி உள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம்

    மத்திய பிரதேச மாநிலம்

    இவர்கள் எல்லோரும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதியை நோக்கி இவர்கள் நடந்து சென்றுள்ளனர். அங்கு சென்று போபாலுக்கு ரயில் ஏற வேண்டும் என்று நடந்து உள்ளனர். இந்த நிலையில் 45 கிமீ நடந்தவர்கள் இடையில் ஓய்வு எடுக்க அந்த தண்டவாளத்தில் படுத்துள்ளனர். கர்மாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் அந்த பக்கம் வராது என்று நினைத்துக் கொண்டு 17 பேரும் தண்டவாளத்தில் படுத்து தூங்கி இருக்கிறார்கள்.

    பலி எண்ணிக்கை என்ன

    பலி எண்ணிக்கை என்ன

    ஆனால் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து,வேகமாக அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 17 பேர் பலியானார்கள். இரண்டு பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் இனி வெளியாகும்.

    English summary
    17 migrant workers died after a train crashed over them in Aurangabad in Maharashtra today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X