மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசியவரை போதும்.. 1995 ஃபார்முலா இருக்குதே.. சிவ சேனாவுக்கு பாஜக வைத்த செக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Shiv Sena may get 12 portfolios in the cabinet | சிவசேனாவிற்கு பெரிய அதிர்ச்சி கொடுக்க பாஜக திட்டம்!

    மும்பை: மகாராஷ்டிராவில், முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே பெரும் இழுபறி நீடிப்பதால், அங்கு யாருமே ஆட்சியமைக்க இதுவரை உரிமைகோரவில்லை.

    இத்தகைய சூழ்நிலையில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரோசாஹேப் டான்வே, பால் தாக்கரேவின் 1995 ஆம் ஆண்டு அரச சூத்திரத்தை பரிந்துரைத்துள்ளார்.

    1995 formula between bjp and Shiv sena: Raosaheb Danve

    இதன் கீழ், அதிக இடங்களை வென்ற கட்சியை சேர்ந்தவர் முதல்வராகவும், 2வது இடத்தை பிடித்த கட்சியை சேர்ந்தவர் துணை முதல்வராகவும் பதவி வகிக்கலாம்.

    பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் இருக்குமா? பவார் உறவினர் 'பொளேர்'பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் இருக்குமா? பவார் உறவினர் 'பொளேர்'

    ஆனால் இரண்டரை ஆண்டு சூத்திரத்தில் உறுதியாக உள்ள சிவ சேனா, 24 வருட பழமையான, சூத்திரத்தை ஏற்குமா என்ற கேள்வி எழுகிறது.

    1995 பார்முலா என்ன?

    மகாராஷ்டிராவில், பாஜகவும், சிவசேனாவும் 1995இல், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணியின் சிற்பி, என்று அழைக்கப்படும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே இடையே, பாஜக மத்தியில் அரசியல் செய்யும் என்றும், சிவசேனா மாநில அரசியலில் நிலைத்திருக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.

    இதன் மூலம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைப் பெறுபவர் முதலமைச்சராகவும், அதற்கு அடுத்த அதிகாரப்பூர்வ பதவி, 2வது இடம் பிடிக்கும் கட்சிக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    சிவசேனா 73 இடங்களையும், பாஜக 65 இடங்களை வென்றது. கூட்டணியின் நிபந்தனையின்படி, சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவியும், பாஜக துணை முதலமைச்சர் பதவியையும் பெற்றது. அதே நேரத்தில், உள்துறை, வருவாய் போன்ற முக்கிய அமைச்சகங்கள் பாஜகவிடம் இருந்தன. இந்த அடிப்படையில், பாஜகவும், சிவசேனாவும் கூட்டாக ஐந்து ஆண்டுகள் அரசை நடத்தின.

    இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு, 56 இடங்களும் கிடைத்துள்ளன. சிவசேனா நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கிறது.

    அதே நேரத்தில் பாஜக 15 சுயேச்சைகள் ஆதரவு இருப்பதாக கூறுகிறது. இந்த நிலையில்தான், பால்தாக்ரே சூத்திரத்தை, இப்போதும் சிவசேனா ஏற்க வேண்டும் என ரோசாஹேப் டான்வே கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா 50-50 என்ற சூத்திரத்துடன் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவியும் தேவை என கோரி வருகிறது. எனவே 1995 சூத்திரத்திற்கு சிவசேனா ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Need 1995 formula between bjp and Shiv sena, says Raosaheb Danve.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X