India
  • search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிய திருப்பம்! அப்படியே மெல்ல தாக்கரே பக்கம் திரும்பும் 20 எம்எல்ஏக்கள்? ஷிண்டேவுக்கு சிக்கல்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், இப்போது வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த மகாராஷ்டிரா அரசியலில் இப்போது அடுத்தடுத்து ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது. மகா விகாஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் நிலைமையைச் சமாளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது சிவசேனா! இந்த பஞ்சாயத்து எப்போது தான் ஓயும் என யாருக்கும் தெரியவில்லை.

 நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.. உங்களால் முடிந்தால் இதை பண்ணுங்க! ஆதித்ய தாக்கரே ஒபன் சேலன்ஞ் நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே.. உங்களால் முடிந்தால் இதை பண்ணுங்க! ஆதித்ய தாக்கரே ஒபன் சேலன்ஞ்

 உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

கடந்த வாரம் வரை பெரும்பான்மைக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆட்சி செய்து வந்த உத்தவ் தாக்கரே இப்போது கடும் அதிருப்தியில் உள்ளார். சொந்த கட்சி எம்எல்ஏக்களாலேயே உத்தவ் தாக்கரே அரசு மைனாரிட்டி அரசாக மாறி உள்ளது. வரிசையாகப் பலரும் ஷிண்டே பக்கம் போவது உத்தவ் தாக்கரேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது முழு கட்டுப்பாட்டில் இருந்த கட்சி இப்படி உள்ளது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அதிருப்தி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது. அமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, குலாப்ராவ் பாட்டீல், தாதா பூஸ் ஆகியோர் தங்கள் இலாகாக்களை இழக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்துல் சத்தார் மற்றும் ஷாம்புராஜே தேசாய் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

 குழப்பம்

குழப்பம்

சொந்த கட்சியினராலேயே மைனாரிட்டியாக மாறிய போதிலும், கட்சி சின்னத்தை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தாக்கரே ஆவேசமாகப் பதில் அளித்துள்ளார். அதேபோல ஷிண்டே தரப்பிலும் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிலர் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் சிலர் பிரஹர் ஜனசக்தி கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மத்தியில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

திருப்பம்

திருப்பம்

இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஷிண்டே தரப்பில் இருக்கும் சுமார் 20 எம்எல்ஏக்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி 20 எம்எல்ஏக்கள் தாக்கரே பக்கம் திரும்பினால், ஷிண்டேவுக்கு 3இல் இரு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காது. இதனால் கட்சி தவால் தடை சட்டத்தின் கீழ் அவரது பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

 போராட்டம்

போராட்டம்

இதுவரை சட்ட ரீதியான போராட்டமாக மட்டுமே இந்த விவகாரம் இருந்து வந்த நிலையில், நேற்றிரவு சிவசேனா தொண்டர்கள் இதை வீதிக்கு எடுத்து வந்தனர். ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்களுக்கு எதிராக அவர்கள் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினர்.

English summary
20 Sena Rebels In Touch With Uddhav Thackeray, Say Sources 20 MLAs camping with rebel leader Eknath Shinde are reportedly in touch with Uddhav Thackeray: (மகாராஷ்டிராவில் நிலவும் பெரிய அரசில் குவப்பம்) Maharashtra political ciris latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X