மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் பரபரப்பு.. 35 சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்காங்க.. பாஜக எம்பி

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 35 பேர் தங்கள் கட்சித் தலைமையில் "அதிருப்தி" அடைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்கும் என்று பார்த்தால் முதல்வர் பதவிக்காக பாஜகவை தள்ளிவிட்டுவிட்டு காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் உடன் சிவசேனா இணைந்து ஆட்சியமைத்து வருகிறது.

முன்னதாக இந்த கூட்டணியை சேரவிடாமல் தடுக்க பாஜக கடும் முயற்சி எடுத்தது. ஆனால் எதுவும்பலிக்கவில்லை. இந்த முயற்சியை முன்னின்று செய்தவர் நாராயண் நானே. இவர் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்து பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி.. வெங்கய்ய நாயுடு தாக்கு நம் நாட்டில் இந்து என்று சொன்னாலே சிலருக்கு அலர்ஜி.. வெங்கய்ய நாயுடு தாக்கு

ஐந்து வாரம் ஆச்சு

ஐந்து வாரம் ஆச்சு

இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவை மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க ஐந்து வாரங்களுக்கும் மேலாக எடுத்துள்ளன. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தை "செயல்படாதது" என்று விமர்சித்தார்.

35 பேர் அதிருப்தி

35 பேர் அதிருப்தி

மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவில் 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்றும் சிவசேனாவில் 56 எம்எல்ஏக்கள் உள்ளார்கள் என்றும் அவர்களில் 35 பேரும் "அதிருப்தி"யுடன் உள்ளதாகவும் ரானே குண்டை போட்டார்.

விவசாய கடன் தள்ளுபடி

விவசாய கடன் தள்ளுபடி

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக உத்தவ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அளித்த வாக்குறுதி "வெற்று" வாக்குறுதி என்றும், அது எப்போது செயல்படுத்தப்படும் என்பதற்கான காலக்கெடு இல்லை என்றும் ரானே விமர்சித்தார்.

அவருக்கு எதுவும் தெரியாது

அவருக்கு எதுவும் தெரியாது

வியாழக்கிழமை அவுரங்காபாத்திற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போய் செய்து வந்ததாக கூறிய ரானே, "எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமலோ அல்லது பிராந்தியத்திற்கு எந்த நிதியையும் கொடுக்காமல் உத்தவ் திரும்பி வந்தார். அத்தகைய அரசாங்கத்திடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்? அரசாங்கத்தை நடத்துவது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐந்து வாரங்கள் எடுத்தார்கள், இதிலிருந்து அவர்கள் எவ்வாறு நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்" என்று விமர்சித்தார்

ராஜ்தாக்கரே உடன்

ராஜ்தாக்கரே உடன்

பாஜகவுக்கும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனாவுக்கும் (எம்என்எஸ்) இடையிலான பிணைப்பு குறித்த ஊகங்களில் பரவும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரானே, பாஜக தலைவர் மட்டுமே இது குறித்து பேசுவார் என்றார்.

English summary
Former Maharashtra chief minister Narayan Rane said that 35 of the 56 Shiv Sena MLAs in the state are "dissatisfied" with their party leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X