மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் முடிவுகள் எதிரொலி.. தொடக்கத்திலேயே பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவு!

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எக்சிட் போல் எதிரொலி... பங்குசந்தையில் வீழ்ச்சி- வீடியோ

    மும்பை: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.

    கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து வருகிறது. மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.

    5 State Election Results: Mumbai Share Market may hit today

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்று மாலை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாலையே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய தொடங்கியது. 1 டாலருக்கு நிகராக 71.35 ரூபாயாக இருந்த மதிப்பு 72.34 ரூபாயாக தற்போது சரிந்து இருக்கிறது.

    தேர்தல் முடிவுகள் மற்றும் உர்ஜித் பட்டேல் ராஜினாமா காரணமாக ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது. தற்போது 1 டாலருக்கு நிகராக 71.56 ரூபாயாக உள்ளது.

    அதேபோல் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கி உள்ளது. தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தை 200 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.

    தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வந்தாலோ, இல்லை பாஜக தோல்வி அடைந்தாலோ பங்கு சந்தை இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறார்கள்.

    English summary
    Mumbai Share Market may hit today due to 5 State Election Results and RBI governor resignation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X